உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மாஜி கடவுள்கள்


மும் ஏராளமாக இருக்கும், சுற்றுச் சுவர் பாதுகாப்பு அளிக்கும், சூழ்ந்திருக்கும் அகழியும் பாதுகாப்பு அளிக்கும், இத்தகைய பலமான கோட்டைக்குள் இருக்கும் எதிரியின் ஆதிக்கத்தை, தன்னந்தனியனாய் வெட்டவெளியில் நின்று எதிர்ப்பது மிகக் கஷ்டமான காரியம். ஆனால் ஒரு சிலராவது முன் வந்து அந்தக் கஷ்டமான காரியத்தில் ஈடுபட்டதால் மட்டுமே, தட்டை உலகம் உருண்டையாகிவிட்டது, தலை பல கொண்ட தேவன், பலி பல கேட்கும் பகவான், தேவியருடன் திருவிளையாடல் செய்யும் கடவுட் கூட்டம் என்ற எண்ணங்கள் மாறி ஆண்டவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற உண்மை துலங்கலாயிற்று.