உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

னிலே, ஈஜிப்ட்டிலே இன்னும் உலகின் பற்பல பாகங்களிலே நம் தெய்வங்களுக்கு எந்த வகையிலும் எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் குறைவில்லாத தெய்வங்கள் நிறைந்திருந்தன என்று எடுத்துக் காட்டுகிறார், மாஜி கடவுள்கள் என்ற இந்த நூலில். ஒரு காலத்திலே அவைகளுக்கும் வானளாவிய ஆலயங்கள் இருந்தன; கோலாகலமான பூஜைகள் இருந்தன. ஹோமர் போன்ற பெருங்கவிகள் பாடும் பெருமையையும் அவை பெற்றிருந்தன.

கண்ணன், கந்தன், வருணன், வாயு, சூரியன், சந்திரன் போன்ற தெய்வக் கதைகளுடன், பல்வேறு நாட்டுக் கடவுளரின் கதைகள் ஒத்திருப்பதையும், அந்நாட்டு மக்களின் கற்பனைத்திறன் எந்த அளவிலும் நமது கற்பனைத் திறனுக்குக் குறைந்தது அல்ல என்பதையும், தத்துவ விளக்கத்திற்கும் அவர்கள் கதையிலே பஞ்சமில்லை என்பதையும் “மாஜி கடவுள்கள்” விளக்கிக் காட்டுகிறது.

ஒரு காலத்திலே மக்களால் போற்றிப் புகழப்பட்ட கடவுள்கள் அந்த நாடுகளிலே இன்று இல்லை. அவைகள் மாஜிகளாக்கப்பட்டுச் சிற்பங்களாகச், சித்திரங்களாகக், காட்சிப் பொருள்களாகக், காட்சிச் சாலைகளிலே விளங்குகின்றன. ஆனால் நமது நாட்டிலோ, பல லட்சங்கள் செலவில், புதிய புதிய கோயில்கள், கும்பாபிஷேகங்கள், நாள்தோறும் பாலாபிஷேகம், பள்ளியறைக் காட்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கினறன!

இந்நிலை நாட்டிற்கு நல்லதா, இந்தத் தீங்கைப் போக்கவேண்டாமா என்ற அண்ணாவின் அரிய சிந்தனையின் பயன் இந்த “மாஜி கடவுள்கள்”. உலகில் மக்கள் அறிவு விளக்கம் பெறாது இருந்த நாளில், இயற்கையின் தன்மை அறியாது, அவற்றைக் கண்டு அஞ்சிக்கிடந்த