ஜுவஸ்
27
யுடன் எண்ணும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறோம்.
இந்த மாஜி கடவுள்கள் ஒரு காலத்தில், விண்ணை முட்டும் கோபுரங்கள் கொண்ட கோயில்களிலே கொலுவீற்றிருந்தனர்—பூஜாரிக் கூட்டம் புடைசூழ, பக்தர் குழாம் பாதம் தொழ, பாவலரும் நாவலரும் பக்திப் பாசுரங்கள் பலப்பல கூறிட, நாடாள்வோன் நவநிதியும் காணிக்கையாகத் தர, கோலோச்சி வந்ததுண்டு.
இந்த மாஜி கடவுள்களின் அருமை பெருமை, அருள் தரும் திறமை, ஆற்றல் ஆகியவை பற்றி பெரிய புராணங்களைத் தீட்டித் தந்தனர், அருட்கவிகள், என்று பாமரரால் புகழப்பட்ட கவிவாணர்கள்.
எனினும், இன்று அவை எலாம், மாஜி கடவுள்களே!!
கொட்டு முழக்கு கேட்கும் கோயிலிலே, அல்ல, இந்த மாஜி கடவுள்கள், இன்று இருப்பது—கண்காட்சிச் சாலைகளிலே!
பூஜாரிகள் மந்திர உச்சாடனம் செய்ய, பூமான்கள் காணிக்கை கொட்ட, பக்திமான்கள் பரவசப்பட, அல்ல, இந்த உருவங்கள், இன்று இருப்பது.
ஆராய்ச்சியாளர்கள் படம்பிடிக்க, சரித்திரக்காரர்கள் சம்பவங்களைத் தொகுக்க, மாணவர்கள் காலத்தையும் கருத்தையும் ஒப்பிட்டுப் படிக்க உதவும் உருவங்களாகிவிட்டன.
எந்தெந்த நாடுகளிலே, ஏத்தி ஏத்தித் தொழப்பட்டு வந்தனவோ, அங்கெல்லாம் இன்று ஏக தெய்வக் கொள்கை அரசு செலுத்துவதால், இந்த மாஜி கடவுள்கள் ஒரு காலத்துக் கற்பனைகள், பழங்காலத்து நினைவுகள், பூஜாரியின் கருவிகள், என்றாகிவிட்டன. பகுத்தறிவாளர்-