உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மாஜி கடவுள்கள்


களாலும் ஆராய்ச்சியாளர்களாலும், பாமரர்களுக்கும் தெளிவு பிறக்கும் வண்ணம், நல்லறிவு அந்த நாடெல்லாம், பரப்பப்பட்டுவிட்டது. நானாவிதமான உருவங்களுடன், நாட்டு மக்களையும் நாடாள்வோரையும், மருட்டிக் கொண்டிருந்த உருவங்கள், இன்று மாஜி கடவுள்களாகிவிட்டன.

அந்த மாஜி கடவுள்களிலே, ஒருவர் ஜூவஸ்—பெருந்தெய்வம்—மூலத்தெய்வம்!

இந்த மாஜி கடவுளின், சக்தியைப் பற்றிய கதைகளை, இன்று, அறிவுள்ளோர் அனைவரும், பூஜாரியும் புலவனும் சேர்த்துத் தயாரித்த சரடுகள் என்று கூறுகின்றனர்—ஆனால், மாஜியாகா முன்பு, ஜூவசுக்கு இருந்துவந்த மதிப்பும் செல்வாக்கும், அளவிட முடியாது! புராணங்கள் பலப்பல, பூஜைகள் பலவிதம்!

ஜூவஸ், கிரேக்கர்கள், பூஜித்து வந்த, பெருந்தேவன்—தேவர்க்கரசன்—தேஜோன்மயமானவன்!

ரோம் நாட்டவர், இதே கடவுளை, ஜூபிட்டர், என்ற பெயரால் பூஜித்தனர்.

ஜுவசின் “திருக்கல்யாண” குணத்தைக் கொண்டாடிப் பாமாலை சூட்ட, அந்த நாட்டில் ‘கம்பன்’ இல்லாமல் இல்லை!

🞸🞸🞸🞸


கருத்தெலாம் அறியும் கண்ணன்
பாரெலாம் பார்த்திருந்தான்!
பத்தரை மாற்றுத்தங்கம்,
பகவான் வீற்றிருந்த பீடம்.
என்னகாண் அவன்தன் ஆற்றல்
என்றுள இடியோன் அவனே.