உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மாஜி கடவுள்கள்


எதிரே, நெரித்த புருவமும், மேல் நோக்கிய கண்களுடனும், நின்று கொண்டிருக்கிறான், பூஜாரி. அவன்முன் காணிக்கைப் பொருள்கள் குவிந்திருக்கின்றன!

இங்கு இன்றும், கேட்கப்படும், சஹஸ்ரநாமம்—அர்ச்சனை—கிடையாது போலும், என்று எண்ண வேண்டாம்! ஜூவசின், திருவிளையாடல் புராணத்தைப் பார்த்தால், யூகித்துக் கொள்ளலாம், அன்று, அந்தப் பூஜாரிகள், என்னவென்ன கூறி, அர்ச்சித்திருப்பார்கள் என்பதை.

உற்றுக்கேளுங்கள், அவன் அர்ச்சிப்பதும் கேட்கும். அதுகேட்டு, பக்தர் குழாம், நெஞ்சு நெகிழ நிற்பதும் தெரியும், மனக்கண்ணுக்கு.

🞸🞸🞸🞸


ஜெகமதைப் படைத்தாய் போற்றி!
தேவனே! ஜூவஸ்! போற்றி!
அமரர்தம் முதல்வா போற்றி!
அவுணரை அழித்தாய் போற்றி!
தீரனே, போற்றி, போற்றி!
திருஅருள் தாராய், போற்றி!
இடிப்படை கொண்டாய் போற்றி!
இகபர அரசே போற்றி!
மழைதனைப் பொழிவாய் போற்றி!
மாபுயல் விடுவாய் போற்றி!
மேக சம்ஹாரா போற்றி!
மேதினி காப்போய் போற்றி.

🞸🞸🞸🞸

அர்ச்சனை, இதுபோன்றுதான் இருந்திருக்கவேண்டும்—ஏனெனில் இப்படிப்பட்ட வல்லமைகள் கொண்ட கடவுளாகவே, ஜுவஸ், சித்தரிக்கப்பட்டு. அக்கால மக்க-