உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜூவஸ்

31


ளால், பக்தி விசுவாசத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு, வந்தார். இது மட்டுமா அர்ச்சனை? விபரீதமான, கடவுட் தன்மைக்கு மட்டுமல்ல, சாமான்யமான மனிதத் தன்மைக்கேகூட முரண்பட்டதான, கேடுபயப்பதான செயல்களையே, சிறப்புக்களாக்கிக் காட்டும், அர்ச்சனைகளும் உண்டு.

🞸🞸🞸🞸

தந்தையை வென்றாய் போற்றி!
தங்கை மணாளா போற்றி!!

என்று பூஜாரி, அர்ச்சித்திருப்பார்! ஏனெனில் ஜூவசின், திருவிளையாடற் புராணத்திலே, அவர் தன் தந்தையுடன் போரிட்டு வென்றதும், தங்கையைத் தாரமாக்கிக் கொண்டதும் சிறப்பாக, விளக்கப்பட்டிருக்கிறது! எனவேதான், இன்று முருகனை வழிபடுபவர்கள் துதிக்கவில்லையா, தந்தைக்குபதேசம் செய்தவா, போற்றி போற்றி, தத்தைமொழி குறமகளை மணந்தவா போற்றி, போற்றி, என்று. அதுபோல, அன்று ஜூவசை, அந்நாட்டுப் பூஜாரிகள் அர்ச்சித்திருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

அந்த அர்ச்சனைகள் எல்லாம் இன்று, ஆடிடும் சிறாரும் கேட்டு, ஆம் என்று ஏற்க முடியாத, கேலியுரைகளாகிவிட்டன.

அந்த அர்ச்சனைகளில் வல்லவர்களான, பூஜாரிகள், யாரும் இன்று கிடையாது கிரீசில்!

அந்த ஆலயங்களே இன்று அங்கு, கிடையாது!!

ஆலயங்களென்ன, அந்த ஆண்டவனே, இன்று அங்கு கிடையாது! ஜூவஸ் ஒரு மாஜி கடவுள்!!

வெள்ளை நிறப்புரவிகள் நான்கு, தேரில் பூட்டப்பட்டிருக்கும். செயல்திறம் கொண்ட உருவும் அமைந்தவராக இருப்பார்.