ஜுவஸ்
33
இப்படி எல்லாமா நடந்திருக்கும்? என்று கேட்பவன் பாபி! இப்படி எல்லாம் செய்வதா, கடவுட் தன்மைக்கு அழகு? என்று கேட்பவன் நாத்திகன்! அவன் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவான்! அவனை இம்சிப்பது “தேவப்பிரீதியான காரியம்.”
ஆதி அந்தமற்ற தன்மைதானே, இன்றைய ஆத்திகம், அன்றைய ஆத்திகம், அவ்விதம் இல்லை. ஜுவஸ் தேவனுக்கு, தகப்பனார் தாயார் உண்டு, பாட்டன் பாட்டியும் உண்டு; அவர்களுக்குள், பகை, போர், மூண்டதுமுண்டு. கடவுள்களா, இப்படிச் செய்திருக்க முடியும். காட்டுமிராண்டி ஜாதியிலே நடைபெறும் செயல் போலிருக்கின்றதே என்று கூறத்தோன்றும். ஆனால் அந்தக் காலத்திலே, கூறியிருந்தால், கூறினவன் நா அறுக்கப்பட்டிருக்கும்—அந்த நாள் ஆத்திகம், அந்தக் கதைகளை நம்பும்படி வலியுறுத்திற்று.
கேளுங்கள், ஜூவஸ் தேவனின் பிறப்பு வளர்ப்பை, கடவுள், பிறக்கிறார். அது ஆத்திகம்!
உலகம் தோன்றா முன்பு, எல்லாம் இருள்மயமாக இருந்தபோது, குழப்பம் எனும் தேவனும் இருளி எனும் தேவியும் மட்டும் இருந்தனர். தெளிவான உருவுடன் அல்ல.
அப்படியானால், எப்படி அவர்கள் தெரிந்திருக்க முடியும்? என்ற கேள்வி, கிளம்பும், உடனே. கேட்பது, நாத்திகம்!
குழப்பமெனும் தேவனும் இருளி எனும் தேவியும் இருந்தபோது, விண்ணோ மண்ணோ கடலோ, கிடையாது என்று கூறுகிறாயே; அது உண்மையானால், அவர்களைக் காண, யார் இருந்தனர், என்று கேட்கத் தோன்றும்,
3