உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மாஜி கடவுள்கள்


ஆனால், கேட்கக்கூடாது. அந்நாளில் கேட்பது நாத்திகம்!

இப்படியும் ஒரு பைத்தியம் இருந்ததா, என்று கேட்பீர்கள், இதில் என்ன அதிசயம்? விமானம் பறக்கும் இந்த விஞ்ஞான காலத்திலேயும் நமது நாட்டிலே, ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷனைக் கண்டது யார், தலைகளை எண்ணிக் கணக்கெடுத்தது யார், ஆதிசேஷன்தான், அண்டத்தைத் தாங்கிக்கொண்டு, கீழே இருப்பதாகக் கூறுகிறாயே, அண்டத்திலே இருப்பவர்கள் அதை எப்படிப் பார்த்திட முடியும், என்று கேட்டுப் பாருங்களேன், மதவாதிகளை ஆத்திகர்களை, என்ன கோபம் வருகிறது பாருங்கள்—நாத்திகன் என்று எவ்வளவு ஆத்திரத்துடன் கூறுகிறார்கள், பாருங்கள்.

இன்று இங்கு நிலைமை இவ்விதம் இருக்கும்போது அந்த நாட்களில், கிரேக்க நாட்டு ஆத்திகர்கள், அவ்விதம் இருந்ததிலே ஆச்சரியமா கொள்கிறீர்கள். அதைப் பித்தம் என்று கூறினால், இன்னும் இங்குள்ள விசித்திர சித்தர்களின் போக்கை என்னவென்று சொல்வீர்கள்.

மனிதர்கள் கதை கிடக்கட்டும்—கடவுள்களின் கதையைக் கவனிப்போம்.

குழப்பதேவனும் இருளித்தேவியும், நீண்ட காலத்துக்குப் பிறகு, சலிப்பேற்பட்டு, தங்கள் அலுவலுக்கு உதவியாக எரியஸ் எனும், மகனை அழைத்தார்கள்.

மகன் செய்த, மகத்தான முதற்காரியம் என்ன தெரியுமோ? தந்தையை ஆட்சிப்பீடத்திலிருந்து விரட்டியதுதான்! விபரீதமாக இருக்கிறதே என்பீர்கள்—இதற்கே பதறாதீர்கள்—மேலும் உண்டு விபரீதம். தந்தையை விரட்டிய எரியஸ், தனிமையை விரும்பவில்லை! தாரம் தேவைப்-