ஜூவஸ்
35
பட்டது. என்ன செய்தான்? தாயையே தாரமாக்கிக் கொண்டான்.
மகனை மணாளனாகப் பெற்ற மாதாவும், அவன் மனம் கோணாமல் நடந்துகொண்டதுடன், ஈதர், எமிரா எனும் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
இந்த இரு மக்களும், தம் பெற்றோரை விரட்டிவிட்டு, ஆட்சிப்பீடமேறினர். எராஸ் எனும் மகவு பிறந்தது. மூவருமாகச் சேர்ந்து, கடல், பூமி, இரண்டையும் படைத்தனர்.
பூமி பசுமையற்று, ஜீவனற்று இருந்தது. ஆதியில், எராஸ், தன் அதிசய அம்பை எய்தான்! செடியும் கொடியும் முளைத்தன! பட்சி வகைகள் பறந்தன! மீன்கள், குளங்களில் உலவின. மிருகங்கள், கானகங்களிலே உலவின; எங்கும் மகிழ்ச்சி—மலர்ச்சி!
பூமி—ஒரு தேவி! இந்த அம்புவிட்டு அற்புதம் நிகழ்த்திப் பிறகு, அந்த அணங்கு, துயிலெழுந்து, தன்னைச் சுற்றிலுமுள்ள சோபிதம் கண்டு, ரசித்து, காதலுள்ளம் கொண்டு, யுரானஸ் எனும் தேவனைச் சிருஷ்டித்தாள்—மணம் முடிந்தது—இருவருக்கும்.
பூமாதேவிக்கு, கியா எனப் பெயர்—மணாளன் பெயர் யுரானஸ்! கியா பூமி; யுரானஸ், விண்ணுலகு! விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமணம்!
இந்தத் தம்பதிகளுக்கு பலசாலிகளான 12 மக்கள் பிறந்தனர்—இவர்களுடைய ஆற்றலைக்கண்டு, யுரானஸ், அஞ்சினான். இந்தப் பிள்ளைகள் வளர்ந்தால், தமது ஆற்றலால் தன்னை அழித்துவிடுவர், என்ற அச்சங் கொண்டு, பன்னிருவரையும் பிடித்து, பாதளத்திலே