உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V

காலத்தில், பூஜாரிகளும், புராணிகர்களும் தோன்றி, மக்களின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டு தெய்வங்களையும் தெய்வக் கதைகளையும் படைத்தனர். இடிக்கும் மின்னலுக்கும் கடவுள், எண்ணற்ற இயற்கைச் சக்திகளுக்குக் கடவுள், அந்தக் கடவுள்களுக்குப் பெண்டு, பிள்ளை, அவர்களுக்குள்ளே போட்டி பூசல் போர் என்ற ஆபாசக் கதைகள் முளைத்தன.

இந்நூலில் கடவுளர் பலரைச் சித்தரித்திருக்கிறார் அண்ணா. அவைகளிலே தந்தையைக் கொன்ற கடவுள், தாயைத்-தங்கையைத் தாரமாக்கிக்கொண்ட கடவுள், காம விகாரம் பிடித்த கடவுள், பஞ்சமா பாதகங்களை அஞ்சாது செய்த கடவுள்–இவைபோன்று இன்னும் பல வேடிக்கையான கடவுளர்களைக் காண்பீர்கள்.

இந்த ஆபாசங்களும் அபத்தங்களும் பல நூற்றாண்டுகள் வரை புராணிகர்களாலும் பூசாரிகளாலும் வளம் பெற்று வளர்ந்தன. மக்கள் அறிவு விளக்கம் பெறப்பெற இவைகளிலுள்ள பொய்மையினை உணரலாயினர், சிந்திக்கவும் செய்தனர். உண்மை உணர்ந்த பலர் வெளியில் சொல்லப் பயந்தனர் என்றாலும், ஒரு சிலர் அஞ்சாது கூறி, அதனால் அந்நாளில் நாடு கடத்தப்படுதல், சிறைக்குள் தள்ளப்படுதல் முதலிய பல கொடுமைகளுக்கு ஆளாயினர்.

அப்படிப்பட்ட காலத்தில் தோன்றியவர்தான் கிரேக்க நாட்டு தத்துவஞானி சாக்ரட்டீஸ். கடவுள் கதைகளின் ஆபாசங்களையும், எத்தர்களின் புரட்டுக்களையும் எடுத்துக் கூறினார் அவர். அதன் பயனாக நாத்திகன் என்ற குற்றம் சாட்டப்பட்டு விஷமூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

சாக்ரட்டீஸ் இறந்தார். அவர் கொள்கை இறக்கவில்லை; மாறாக ஆக்கம் பெற்றது. அவர் மறைவுக்குப்