36
மாஜி கடவுள்கள்
கொண்டுபோய், இரும்புச் சங்கிலிகள் கொண்டு கட்டிவிட்டான்.
இந்தப் பன்னிருவரில், ஆறுபேர் ஆடவர், அறுவர் பெண்டிர். பாதாளச் சிறையிலிருந்து இந்தப் பிரம்மாண்டமான மக்கள், வெளிவர முடியாது, எனவே தனக்கு அழிவு கிடையாது, என்று அகமகிழ்ந்து யுரானஸ் இருந்தான்; மக்களைப் பெற்ற மாதாவுக்கோ, தாங்கொணாத் துயரம்; கணவனுடன் வாதாடிப் பார்த்தாள்; பலன் இல்லை—எனவே அவளும், பாதாளலோகம் சென்றுவிட்டாள்; தன்மக்களைத் தூண்டினாள், தகப்பனைத் தாக்கச் சொல்லி.
பன்னிருவரில், கடைக்கோட்டி, குரோனஸ்—அவன்தான் ஆர்த்தெழுந்தான் அன்னை உரைகேட்டு—கோடரி தந்தாள் அன்னை—கொண்டு சென்றான், தந்தையைத் தோற்கடித்து, சிம்மாசனம் ஏறினான்—தந்தை, மகனைச் சபித்தான், நீயும் உன் மகனாலேயே, மாளக்கடவாய் என்று.
குரோனஸ், தன் உடன்பிறந்தாரைப் பாதாளச் சிறையிலிருந்து மீட்டான்—தன் தங்கை, ரியா என்பாளை மணம் புரிந்துகொண்டான். ஒலிம்பஸ் எனும் உயர்மலை மீது, வெற்றிகண்ட குரோனஸ், வீற்றிருந்தான்.
ஒரு நன்னாள், மகனொருவன் பிறந்த சேதி கேட்டான் குரோனஸ், உடனே தந்தையிட்ட சாபம் கவனத்திற்கு வந்தது—பதறினான்—தாரமான தங்கையிடம் சென்றான். தருக மகவை! என்று கேட்டான். அவளும் அகமகிழ்ச்சியுடன் தர, வாங்கினவன், அவள் கண்டு பதறும்படி அதனைத் தன் வாயில் போட்டு, விழுங்கிவிட்டான்.
இப்படிப் பல குழந்தைகளை அவன் விழுங்கிக் கொண்டு இருந்தான்—சாவை தடுத்துக்கொள்ள, மாதா-