ஜுவஸ்
37
வின் மனம் பற்றி எரிந்தது. ஒரு மகவையாவது, காப்பாற்றியே தீருவது என்று, தீர்மானித்தாள். ஜூவஸ் பிறந்தான். பிறந்ததும், குழந்தையைச் சில தேவகன்னியரிடம் கொடுத்து, இடா மலையில் எவருக்கும் தெரியாவண்ணம், வளர்த்துவர ஏற்பாடு செய்தாள். கொடு குழந்தையை எனக் கொடியோன் கேட்டான். மன்றாடினாள்—அவன் பிடிவாதம் செய்தான்—எனவே, தந்திரமிக்க அவள், ஒரு பெருங்கல்லை, ஆடைபோர்த்து, அவனிடம் தந்தாள் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுதானே! அப்படியே விழுங்கினான், தன்னைக் கொல்லப்பிறந்த குழந்தையை விழுங்கியதாகவே எண்ணி எக்களிப்புக் கொண்டான். குழந்தையோ, தேவகுமாரிகள் சீராட்டிப் பாராட்டி, வளர்க்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.
இடாமலையில் ஒரு குகையில் இங்ஙனம் வளர்ந்து வந்த ஜுவசுக்குப் பால்தரும் பணியினை ஏற்றுக்கொண்டிருந்ததாம், ஒரு ஆடு—அதற்குப் பெயர், அமால்தியா என்பதாகும் ... ஆண்டவனுக்குப் பாலூட்டியதற்காக அந்த ஆட்டுக்குப் பரமபதம் பிறகு கிட்டிற்றாம்.
கரி, நரி, பரி, கருங்குருவி, ஓணான் முதலியவற்றுக்கெல்லாம், பரமபதம் கிடைத்ததாக, நம்மிடம் புராணம் உண்டல்லவா? கிரேக்கப் புராணீகன் ஆட்டுக்கும் பரமபதம் அளித்தான். இன்று, ஆடு அமரர் உலகு அடைந்த கதையைக் கூறினால், கிரேக்க நாட்டிலும், அறிவு முன்னேறியுள்ள எந்த நாட்டிலும் கைகொட்டித்தான் சிரிப்பார்கள். இங்கோ, ஓணான் முக்திபெற்ற கதையைக் கேலியாக, யாரேனும் பேசினால், ஓம் சாந்தி என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்யும் நல்லவருங்கூட, பாவீ! நாத்திகா! என்று கோபிப்பர்! அறிவு இங்கு அந்த அளவுக்கு ஒத்துழையாமை செய்கிறது.