ஜூவஸ்
39
இப்படிப்பட்ட ஆற்றலைக் காட்டிய ஜுவஸ் ஆண்டவனானான், அதற்குப் பிறகும், ஜூவஸ், அசுரர்களுடன் போர் புரியவும், தன் ஆதிக்கத்தை எதிர்த்த தேவர்களுடன் போர் புரியவும் நேரிட்டது. எல்லாவற்றிலும், ஜுவஸ் வெற்றி பெற்றான். எனவே, அவன் ஆதிக்கத்துக்கு அண்டம் அடங்கிற்று.
இத்தகு, கதைகளை, புண்ய கதைகளாகக் கொண்டு, நெடுங்காலம் வரையில், கிரேக்க மக்கள், ஜுவசைப் பூஜித்து வந்தனர்.
கடவுள் எனத் தொழுகிறோமே, தாய் தந்தை, பாட்டன் பாட்டி, என்று குடும்பம் கற்பிக்கிறோமே, வம்சாவளிக்குக் கதை கூறுகிறோமே, சரியா, என்று புராணீகனும் எண்ணவில்லை, மக்களும் எண்ணவில்லை. அவ்விதமான எண்ணமே, நாத்தீகமாகக் கருதப்பட்டது.
ஒலிம்பஸ் மலையையும் அதன்மீதமர்ந்து அண்டத்தைப் பரிபாலிக்கும் தேவனையும் குறித்து, சந்தேகப்படுபவன், சண்டாளனாகக் கருதப்பட்டான். காவியங்கள் புனைந்தனர், ஜூவசின் அருமை பெருமை பற்றி! பூசைகள் ஏராளம்! மலைமலையாகக் காணிக்கைகள்! மந்தை மந்தையாக மெய்யன்பர்கள்! கோயில்கள் பிரம்மாண்டமான அளவில்! இவ்விதமான கோலாகலத்துடன் கிரேக்க மக்களின் கருத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த, ஜூவசுக்கு, இன்று என்ன மதிப்பு தருகின்றனர், கிரேக்க மக்கள்! கடவுள், என்ற நிலையே இல்லை. கடவுள், இப்படிப்பட்ட குணமும் செயலும், கொண்டவராக இருக்கமுடியாது. குடும்பக் கலகமும் கொடிய ஆயுதம் கொண்டு கொல்வதும், ராஜ்யத்தைப் பிடிப்பதும், ரணகளத்தில் உழல்வதுமாக இருப்பது, ஆண்டவனுக்குரிய இலட்சணமல்ல, மக்களின் மதியில் மூடுபனி மிகுந்திருந்தபோது மூண்டெழுந்த அச்-