உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜூவஸ்

41


யைக் காட்டி, அதனால், சித்ரவதைக்கு ஆளானவர்கள், எவ்வளவு பேரோ!

பலிபீடத்தில் ஏராளமான இரத்தம் சிந்தப்பட்ட பிறகே, பகுத்தறிவாளரின், குரல், மக்கள் செவியில் விழவும், பாமரரின் சிந்தனையில் தெளிவு பிறக்கவும் முடிந்தது. கடவுள்கள் என்ற நிலைபெற்ற கற்பனையுடன் அறிவு, மோதுதல் செய்யவேண்டி நேரிட்டபோது, பாமரமக்கள் கற்பனையின் பக்கம்தானே திரண்டு நிற்பர்! பாமரரின், பகையினால், வீழந்தவர் போக, மிச்சமிருந்த பகுத்தறிவாளர்கள், தூக்குமேடைக்கும் அஞ்சாது, உண்மையை உரைத்தனர்—உழைத்தனர்—வாதிட்டனர்—போரிட்டனர்—வென்றனர். ஜூவஸ், மாஜி கடவுளானார்! அறிவு வென்றது! அஞ்ஞானம் தொலைந்தது!!