உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஹீரா, ஜூவசுக்குத் தங்கை; தங்க நிறமும் ஆவலைத் தூண்டும் பேரழகும், கண்டோர் கைகூப்பி நிற்கும் எண்ணம் கொள்ளத்தக்க கெம்பீரமும், கொண்ட அம்மை! பெருங்கவியாம் ஹோமர் (Homer) “காளைக்கண்ணழகி” என்று வர்ணித்திருக்கிறார். ஹீரா, ஜூவசின் தங்கையாகப் பிறந்து வளர்ந்தார்–ஆனால் ஜூவஸ் ஹீராவைத் தாரமாக்கிக் கொண்டார். தேவன், தேவி என்ற முறையில் அரசோச்சலாயினர்.

ஹீரா தேவி

ஹீரா ஜுவசுக்குத் தங்கை; தங்க நிறமும் ஆவலைத் தூண்டும் பேரழகும், கண்டோர் கைகூப்பி நிற்கும் எண்ணம் கொள்ளத்தக்க கெம்பீரமும், கொண்ட அம்மை! பெருங்கவியாம் ஹோமர், (Homer) “காளைக் கண்ணழகி” என்று வர்ணித்திருக்கிறார்! நமது நாட்டுக் கவிவாணர்கள் ‘கமலக்கண்’ என்பார்கள், ஏனோ தெரியவில்லை, அவர் அம்மையைக் ‘காளைக் கண்ணழகி’ என்றுரைத்தார்; கணவனின் காமாந்தகாரத்தைக் கண்டிப்பதிலும் அவனுடைய காமக்கூத்துக்கு இணங்குபவர்களை வாட்டி வதைப்பதிலும், ஹீரா, திறமைசாலி; கண், காளைக்கு இருப்பது போல இருந்தது போலும்!