உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹீரா தேவி

43


ஹீரா, ஜுவசின் தங்கையாகப் பிறந்து வளர்ந்து வந்தாள்—ஆனால் ஜூவஸ், ஹீராவைத் தாரமாக்கிக்கொண்டார்; தேவன், தேவி, என்ற முறையில், அரசோச்சலாயினர்.

ஹீரா தேவியாருக்கு, ‘ஸ்வர்ணசிம்மாசனம்’! பசு, மயில் குயில், இவை மூன்றும், தேவியினால், உத்தமமானவைகளாகக் கருதப்பட்டன.

ஜுவஸ், ஹீரா, திருமணம், மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கலியாணத் தோட்டத்திலே, கடவுட் கூட்டம், களிநடமாடித் தம்பதிகளைப் புகழ்ந்து பாராட்டினர்! பூமியும் பூரித்தது இத்திருமணச் ‘சேதி’ கேட்டு; பொன் ஆப்பிள்கள் காய்த்துக் குலுங்கும் ஒரு அற்புதமான மரம், பூமியிலிருந்து திடீரென முளைத்ததாம்.

தங்கை தாரமானாள்! தயாபரனின் திருவிளையாடல்! பகுத்தறிவுத் துறையினர், ஆராய்ச்சியாளர் என்போர் மட்டுமல்ல, சாதாரண மக்கள்கூட இன்று, இச்செய்தியைக் கேள்விப்பட்டால், பதைப்பர், அருவருப்படைவர்; “இது என்ன கடவுளய்யா!” என்று கடிந்துரைப்பர். எவனோ கருத்துக் குழப்பமுடையோன், கட்டிவிட்ட கதை இது, கடவுளின் குணமும் இலட்சணமும் அறியாதவன் எவனோ தீட்டிவைத்த தீய ஏடு என்று தீர்ப்பளிப்பர். ஆனால் அன்று! ஆத்திகத்தின் அடையாளமே, அந்தத் தேவமாக் கதையைப் பக்தியுடன் ஏற்றுக்கொண்டு, பாராயணம் செய்வதுதான். ஜூவசைத் தொழுவது போலவே ஹீராவையும் பூஜிக்க வேண்டும்; இருவருக்கும் திருமணம் நடைபெற்றதே, கேட்பதற்கே கர்ண கடூரமாக இருக்கிறதே என்று எண்ணுபவன் பாவி; சொல்லத் துணிபவன் சொல்லொணாச் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவான், பக்தர்களால்! பூஜாரி பூபதியிடம் புகார் கூறுவான், “மன்-