உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மாஜி கடவுள்கள்


னவா! மாபாவி ஒருவன்; ஹீரா மாதாவைப் பழித்துப் பேசுகிறானாம்! இம்மண்டலம், அழிந்துபடும், மாதா கோபங்கொண்டால். தேவியாரின் திரு அருளால்தான் நீ மன்னனானாய்! மண்டலம் செழிப்புடன் இருக்கிறது. மாபாவியை, இன்றே, கொன்றுவிடு, மாதாவின் கோபம் கிளம்பாமுன்; நாத்திகம் பரவாமுன்; நாசம் உன்னையும் உன் நாட்டையும் தொடா முன்பு!” பூபதியும், “அந்தப் புத்தியற்றவனை இழுத்து வா!”—என்று உத்தரவிடுவான்; சந்தேகம் பேசியவன், தலை உருளும் கீழே! அது அந்த நாள் நிலை—ஆத்திகம்.

ஹீரா தேவியார், அண்ணனை நாயகனாகக் கொண்டு அண்டத்தை ஆளும் நிலையைப் பெற்று இருந்தபோதிலும், அவர்களுக்கு, அடிக்கடி தொல்லையும் துயரமும், வந்தபடியே இருந்தன. ஏன்! கணவனின், குணம், ஒரு மாதிரி! கட்டழகி எங்கு இருந்தாலும்—தேவலோகமானாலும் பூலோகமானாலும், ஜூவஸ் தேவனுக்கு, காதல் பிறந்துவிடும், முறையா? சரியா? தன் உயர்நிலைக்கு ஏற்றதாகுமா என்பது பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கமாட்டார்—சாமான்ய மக்களல்லவா, இவைகளைப் பற்றி யோசிக்க வேண்டியவர்கள்! மூல தேவனுக்குமா, இது! செச்சே! அவர், கடவுள்—எனவே, கட்டுத்திட்டம்—நீதி நேர்மை இவை பற்றிக் கவனிக்க வேண்டியவரல்ல—கண்ணைக் கவர்ந்தாள் ஓர் காரிகை என்றால், அவள் கடவுளுக்கு அர்ப்பணம்தான்! விடமாட்டார் ஜுவஸ்! அவருடைய இந்தக் காதல் விநோதம் பல விபரீதங்களுக்கு இடமளித்தது.

ஹீரா தேவியாருக்குக் கோபமும், பொறாமையும் ஆத்திரமும், வராமலிருக்குமா! பேரழகி நானிருக்க. இவர் வேறோர் மங்கையை நாடுவதா! அவள்தான், என்ன எண்-