உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹீரா தேவி

45


ணுவாள், என்னைப்பற்றி! அவனிதான். என்ன எண்ணும் ஜூவஸ், ஹீரா இருக்க, வேறோர் பெண்ணைத் தேடி அலைகிறார்—ஆகவே, ஹீரா ஒரு சமயம் அவலட்சணமோ!—என்றுகூடப் பேதைகள் பேசக்கூடுமே. ஜூவசின் காதலைப் பெறும் காரிகை, கர்வமும் அடையக்கூடுமே—ஹீரா தேவியைவிட நான் அழகு வாய்ந்தவளாக இருப்பதால்தான், ஆண்டவன், நம்மை நாட நேரிட்டது—என்றல்லவா எண்ணி ஆணவம் கொள்வாள்—எப்படி இதைச் சகித்துக் கொள்வது! ஏன் சகித்துக்கொள்ளவேண்டும்? என் உரிமையை ஏன் இழக்கவேண்டும்? என்றெல்லாம் எண்ணி, ஹீரா தேவியார், ஜுவஸ் தேவனின், காமக்களியாட்டத்துக்குத் தன்னால் முடிந்த அளவு, முட்டுக்கட்டை போட்டபடி இருப்பார்களாம். அம்மை இது செய்யாதிருந்தால், ஐயனின் லீலாவிநோதம் இன்னும் எவ்வளவு வளர்ந்திருக்குமோ—புராணிகனுக்கு இன்னும் எத்துணை ‘புனிதப் புளுகுகள்’ கிடைத்திருக்குமோ, யார் கண்டார்கள்.

கணவனின் நடவடிக்கைகளைச் சதா கண்காணித்து வந்த, ஹீராவுக்கு, ஒரு சமயத்தில் ஜூவஸ், ஒரு புதுப் பாத்திரத்தின்மீது, மோகம் கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது; கோபம் மூண்டது.

ஜூவசின் கருத்தைக் கவர்ந்த அந்தக் கட்டழகி, ஆற்றுத் தேவன் இனாகஸ் என்பானின், குமரி, அழகி பெயர், அயோ. அவளை அணுகினார், ஜூவஸ். கடவுளின் காதலை அந்தக் கட்டழகி ஏற்றுக்கொண்டாள். இந்தச் ‘சேதி’தான், எட்டிவிட்டது, ஹீராவுக்கு; விட்டேனா பார், அவளை!—என்று கூறியபடி விண்ணிலிருந்து கீழே தாவினாள் தேவி! தேவன் இதை அறிந்தான்—காதலியை, மனைவியின் கோபத்திலிருந்து காப்பாற்ற வேண்டி, கருமேகங்களை அவசர அவசரமாகப் படைத்து