46
மாஜி கடவுள்கள்
வானத்தில் உலவவிட்டான்; அவைகள், திரைபோலாகிவிட்டன; தேவி அவைகளை ஊடுருவிக்கொண்டு வந்து சேருவதற்குள், அழகி அயோவை, ஒரு பசுங் கன்றாக உருமாற்றிவிட்டு, ஜூவஸ் தேவன், ஏதுமறியாதவர் போலிருந்து வந்தார். ஹீரா கோபத்துடன் வந்திறங்கி, கொடியவளைக் காணாமல், பசு இருக்கக்கண்டு, பதியை நோக்கி, “இது என்ன?” என்று கேட்க, பரமன், “ப்ரியே! பார் இதனை! இப்போதுதான் இதனை நான் படைத்தேன்” என்று பசப்ப, தேவி இதிலேதோ சூது இருக்கிறது என்று எண்ணி, “ஆம்! ஆருயிரே! அழகின் வடிவமான இப்பொருளை, தங்கள் அருந்திறமையால் படைக்கப்பட்ட இதனை, அடியாளுக்குத் தரவேண்டுகிறேன்” என்று கெஞ்சலானாள். என்ன செய்வார் ஜூவஸ்! சரி; என்றார். இழுத்துச் சென்றார் தேவியார், இன்பவல்லியாக இருந்து இறைவனால் பசுவாக்கப்பட்ட, ஆற்றுத் தேவனின் அழகு மகளாம் அயோவை.
பசுவாக உருமாற்றப்பட்ட பாவையை, ஒரு ஆற்றோரத்தில், மேயவிட்டு, பத்திரமாகப் பாதுகாத்து வரும்படி, ஹீரா தேவியார் ஆர்கஸ் என்ற தன் ஏவலாளை, அமர்த்தினாள்.
இந்த ஆர்கஸ், ஒரு அற்புதப் பேர்வழி! நமது புராணிகன், இந்திரனுக்கு ஏதோ ஓர் இக்கட்டின் காரணமாக, ஆயிரம் கண் ஏற்பட்டதாகக் கதை திரித்தான். கிரேக்கப் புராணிகன், இந்த ஆர்கஸ் எனும் குட்டிக் கடவுளுக்கு, உடலெல்லாம் கண் உண்டு, என்று கயிறு திரித்து வைத்தான். எந்தச் சமயத்திலும், ஆர்கஸ், ஏதாவது இரண்டு கண்களைத்தான் மூடிக்கொள்வானாம்–தூங்க! கண்கள்தான் எண்ணற்றன! எனவே, தூங்கினாலும், விழித்துக்கொண்டிருப்பது போலத்தான்! இரு