48
மாஜி கடவுள்கள்
இதுபோன்ற, அர்த்தமற்ற ஆபாசம் நிரம்பிய கதைகள் கடவுட் கதைகளாக உள்ளன, பாராயணத்துக்கு உரியன! பக்தர்களுக்குப் பரவசம் தருவன! பகுத்தறிவாளன், அவற்றினைக் கண்டித்தால்போதும் பாய்வர் அவன்மீது! பாபீ! நாத்திகா! என்று சீறுவர். முருகன், கடவுள் என்கிறீர்! அவர், வேங்கை மரமாக மாறினார் என்கிறீர்! அதுவும், கள்ளத்தனமாக ஒரு பெண்ணைக் காதலிக்க, என்று கூறுகிறீர்—கடவுளுக்கு இந்த வேலை தேவையா?
“காயாத கானகத்தில் நின்றுலாவும் நற்காரிகையை” அடைய, முருகன், இவ்வளவு செய்யத்தான் வேண்டுமா? வள்ளியோ, மானிடமகள்! முருகனோ கடவுள்! எம்மாத்திரம், அவர் மனதுவைத்தால்! நாரதர் போதாதா, தூதுபோக! நம்பிராஜன் மறுத்தா விடுவான்! வேடனாவானேன், வேங்கையாவானேன், கிழவனாவானேன், வேழத்தை அழைப்பானேன், இதெல்லாம், யார் நம்புவது!” என்று கூறிப்பாருங்கள், திருப்புகழ் படிக்குமவர் சீற்றமதனாலே, “சிறுமதியாளனே! பெருநெறி அறியாய்! சிவனாரின் மகனின் சேதியும் தெரியாய்! உருத்தெரியாமல் ஒழிப்பான் உனையே!” என்றெல்லாம் ஏசுவர். இன்றும், இதுபோன்ற நிலை இங்கு.
பாவை பசுவானது, குளம்பினால் பெயர் தீட்டிக் காட்டியது போன்ற, புராணங்களை, இன்று, கிரேக்க நாட்டிலும், அறிவு பரவியுள்ள எந்த நாட்டிலும், பித்தர் பட்டியில் உள்ளோரும் நம்பார்! ஒரு காலத்து ஆத்திகம், இன்று, அறிவுச்சூன்யம், என்று அங்கு ஆக்கப்பட்டுவிட்டது.
மகளே இந்தப் பசு என்று கண்டு ஆற்றுத்தேவன், மனம் பதறினான்! இக்காட்சியைக் கண்டான், பலகண்