ஹீரா தேவி
49
தேவன், ஆர்கஸ் விரட்டியடித்தான், விம்மும் தந்தையை. மற்றோர் வெற்றி, ஹீரா தேவியாருக்கு; மனவேதனை, ஜூவஸ் தேவனுக்கு.
இந்தப் பல கண்ணனை ஒழித்தால்தான், பசுவை மீண்டும் பாவையாக்கி மகிழமுடியும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் ஜூவஸ். ஹெர்மிஸ் என்ற குட்டிக் கடவுளை ஏவினான், எப்படியாவது, ஆர்கசை, அழித்துவிட்டு வரச்சொல்லி. அவன், ஒரு அற்புதமான குழலெடுத்து ஊதினான்—கேட்போர் மயங்கும் விதமாக! நமது புராணிகன் கண்ணனின் குழலைப்பற்றிக் கதை கட்டினானல்லவா. அதுபோல் பசுவும் கன்றும், பாவையரும் பாம்பும், கண்ணனின் குழல்கேட்டு மயங்குவர், என்று துவக்கிய புராணிகன், பாரதப் பெரும்போரே, நேரிடாதபடி, குழலை ஊதினான் கண்ணன், துரியன் சபையில், துரியன் பாண்டவர் மீதிருந்த பகை நீங்கப்பெற்று, தூயமனத்தினனாகி, அவரடி தொழுது, தர்மனைத் தழுவி, தூய துரியனானான் என்று முடிக்கவில்லையல்லவா! குழல், ஒரு அளவுக்குத்தான் பயன்பட்டது. அங்கும் அவ்விதம்தான்! எல்லோரையும் மயக்கிய அந்தக் குழல் பல கண்ணனை மயக்கவில்லையாம்! அவன் வழக்கம்போல், இருகண் மூடியாகவே இருக்கக்கண்டான், ஹெர்மிஸ். எனவே, வேறோர் தந்திரம் செய்தானாம்! சுவையான கதை ஒன்று கூறினானாம், அதைக் கேட்டுக்கொண்டே, ஆர்கஸ், தூங்கிவிட்டானாம்—எல்லாக் கண்களையும் மூடிக்கொண்டு. இதுதான் சமயமெனக் கண்ட ஹெர்மிஸ், அவனைக் கொன்று, அயோவைச் சிறைமீட்டானாம்! எனினும், பசுவைப் பாவையாக்க முடியவில்லை, குட்டிக் கடவுளால். ஹீரா தேவியாருக்கு, விஷயம் தெரிந்தது—கோபம் மூண்டது, இறந்துபட்ட ஆர்கசின், பல கண்களை, எடுத்து, தன் பிரியத்துக்குரிய மயிலின் தோகைக்குக் கண்களாக
4