உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மாஜி கடவுள்கள்


“அடி! காலிஸ்ட்டா! எழுந்திரடி!”—ஜூவஸ், தட்டி எழுப்புகிறார், தளிர் மேனியாளை.

“அதிக நேரம் தூங்கி விட்டேனம்மா, டயானா தேவி”—என்று கூறியபடி கண்களைத் திறக்கிறாள் காரிகை. கமலம் இரண்டு கண்டேன் என்று களிக்கிறார் டயானாவான ஜுவஸ். காலிஸ்ட்டாவின் கனிமொழி அவருடைய காமப்பித்தத்தை மேலும் கிளறுகிறது.

“கண்ணே காலிஸ்ட்டா! கட்டழகி காலிஸ்ட்டா!” தொட்டிழுத்து முத்தமிட்டபடி, கொஞ்சுகிறார், டயானா வடிவுடன், ஜுவஸ். இந்த விசித்திரப் போக்கைப் புரிந்துகொள்ள முடியவில்லை, காலிஸ்ட்டாவால்! டயானா அணைத்துக் கொள்கிறாள்! டயானா, கன்னத்தைக் கிள்ளுகிறாள்! டயானா, கூந்தலைக் கோதுகிறாள்! டயானா காதல் சேட்டைகள் புரிகிறாள்! முத்தமிடுகிறாள்! கட்டிக் கரும்பே! கற்கண்டே! என்று கொஞ்சுகிறாள்—காலிஸ்ட்டாவிடம்! இதென்ன விபரீதம், டயானாதானா?—இப்படியெல்லாம், சரசமாடக் காரணம் என்ன—என்று எண்ணித் திகைக்கிறாள். அகலிகைகூட கௌதம் வேடத்தில் வந்த இந்திரன், விளையாடும் விதத்தைக் கண்டு, இதென்ன நமது நாதன் அல்ல போலிருக்கிறதே என்று ஒரு கணம் சந்தேகித்ததாகச் சொல்லப்படுகிறதல்லவா, அதுபோல! காலிஸ்ட்டா திணறுகிறாள்—போராடுகிறாள், தன்னை மாய டயானாவின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள. ஆனால் முடியுமா! சாமான்யருடைய பிடியா அது! சாட்சாத் ஜூவஸ் தேவனின் பிடி! பசும் புற்றரை மஞ்சமாயிற்று! ஜூவஸின் பசியும் தீர்ந்தது. பாவை பதறினாள்—வெட்கித் தலை குனிந்தாள். ஜூவஸ் தேவன், எவ்வளவோ முக்கியமான அலுவல்களுக்கிடையிலல்லவா, இந்தத் திருவிளையாடல் புரிந்தார். எனவே அவர்