உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மாஜி கடவுள்கள்


“என்னடி இது”—டயானா கேட்கிறாள் கோபமாக காலிஸ்ட்டாவின் கண்ணீரைக் காண்கிறாள். தோழியர் திகைக்கிறார்கள்!

“கெடுமதி கொண்டவளே! கெட்டலைந்த நாரீ! இனி என் தோழியாக இருக்கும் யோக்கியதை உனக்குக் கிடையாது. போ, நில்லாதே!” என்று கண்டித்து, விரட்டிவிட்டாள். ஜூவஸ் தேவனின் அக்ரமத்துக்கு இடமளித்தாள், அவமதிப்பு பெற்றாள், டயானாவின் அவையில் இருக்கும் அந்தஸ்த்தையும் இழந்தாள், அழகி காலிஸ்ட்டா. பிறகு காலிஸ்ட்டாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

ஜூவஸ் தேவனின் காமக்களியாட்டத்தால் தாக்கப்பட்டுத் தத்தளித்த காலிஸ்ட்டாவை, சும்மா விடவில்லை, ஜூவசின் பத்னி, ஹீரா தேவியார். தன் கணவனின் காமச் சேட்டைகள் அனைத்தும் அறிந்தவர்களல்லவா தேவியார்! காலிஸ்ட்டாவுடன் ஜூவஸ் நடத்திய காம விளையாட்டும் தேவியாருக்குத் தெரிந்தது. கோபம் பிறக்காமலிருக்குமா! உடனே, காலிஸ்ட்டாவை, பெண் கரடியாகும்படி சாபமிட்டுவிட்டார்! ஆண் தெய்வம் கற்பை அழித்தது, பெண் தெய்வம், உருவை அழித்தது—இத்தனைக்கும் காலிஸ்ட்டா செய்த ஒரே குற்றம், அவள் அழகாக இருந்ததுதான்!

காலிஸ்ட்டாவுக்குக் கரடி உருவம்—ஆனால் பெண் உள்ளம்! எந்தக் கானகத்திலே கட்டழகியாக, ஆடிப்பாடி இருந்து வந்தாளோ, அங்கு, கரடியாகி, தன் முன்னாள் நிலையை எண்ணி எண்ணி விம்முகிறாள் காலிஸ்ட்டா.

ஜூவஸ் தேவனுடைய காதல் விளையாட்டுகள் கணக்கிலடங்கா! அழகிகளைக் கண்டால் அந்த ஆண்டவனுக்கு மனதிலே அலைமோதாமலிருப்பதில்லை. மிகத் திறமை-