ஹீரா தேவி
55
யாகத்தான், ஹீரா தேவி ஜூவசைக் கண்காணித்து வந்தார்கள்—எனினும், ஜூவஸ் தேவன், எப்பாடுபட்டாவது, மேகரூபமோ காளை உருவோ, ஏதேனும் ஒரு அவதாரம் எடுத்தாவது காதல் கனிரசத்தைப் பருகி மகிழ்வார். கடவுள், என்றால் சர்வசக்தி வாய்ந்தவர், என்பது ‘பக்த இலக்கணம்.’ மனிதர்களுக்குச் சாத்யமாகாத அரும்பெரும் செயல்களைக் கடவுள் செய்து முடிப்பார்—எனவேதான் அவர் பூஜைக்குரியவர் என்பது பூஜாரியின் வாதம்! களவு, கொலை, காமக்களியாட்டம் போன்ற செயல்களைச் செய்வது ஒழுக்கத்துக்கும் பண்புக்கும் ஊறு தேடுவதாகும் என்ற காரணத்தால் சாமான்யர்களான மனிதர்களே சமுதாயத்திலே சில கட்டுத்திட்டங்களை அமைத்துக்கொண்டனர்—அதற்கேற்ப நடந்தனர்—அதை மீறுவோர் இழிமக்களென்று கண்டிக்கப்பட்டனர்—தண்டிக்கப்பட்டனர். ஆனால் சகல வல்லமை பொருந்தியவர் என்ற இலட்சணத்தைக் கூறி, எந்தக் கடவுளரை, பூஜாரி புராணீகன் ஆகியோர் சொல் கேட்டு மக்கள் தொழுது வந்தனரோ, அந்தக் கடவுளர் ஆபாசமான லீலைகளிலே ஈடுபட்டும், அக்ரமமான காரியங்களைச் செய்தும், தமது திருக்கலியாண குணத்தை வெளிப்படுத்தினர். மக்கள் இவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, மனம் பதறிடவில்லை. பக்தி, அவர்களுடைய சிந்தனையைச் சிதைத்தது. பூஜாரி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கவிடாமல் தடுத்தான். அதனால், ஜூவசின் காமவெறிச் செயலை எல்லாம் கடவுளின் திருவிளையாடல் என்று கூறிப் பூரித்தனர்.
ஆர்காஸ் நாட்டு மன்னன் மகள் டானே, அழகுமிக்கவள்! ஆரூடக்காரன் இந்த மங்கை வயற்றிலுதிக்கும் மகனாலேயே உனக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறி