உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹீரா தேவி

57


ஹுரா தேவியாருக்கு, வானவில்தான், தூது செல்லும் தோழி, என்றான் கிரேக்கப் புராணிகன்—இன்று விஞ்ஞானி வானவில் அமைப்பை விளக்குகிறான், அங்கு. இங்கோ, உருண்டு கிடக்கும் கல்லைக்காட்டி, இது கண்ணன் உருட்டி வைத்த வெண்ணெய் என்றும், தேய்ந்து இருக்கும் கல்லைக் காட்டி, இது துரோபதை, மஞ்சள் அரைத்த இடம் என்றும் தூற்றுகிறார்கள்!

ஹீராவுக்கு ஒரு காலத்தில் கிரேக்க நாட்டில் இருந்து வந்த செல்வாக்கு, கொஞ்சமல்ல! ஹீராவையே, ரோம் நாட்டவர், ஜூனோ என்ற பெயர் சூட்டித் தொழுது வந்தனர்.

ஆர்காஸ், ஸ்பார்ட்டா, மைசீன், எனும் தலங்கள் இருந்தன—ஹீரா தேவியாருக்கு மக்கள் மூவர், தேவிக்கு! பூஜை, பலம்; கோயில், பிரமாண்டம்!

ஆனால் இன்று இவை எல்லாம், புராணப்புளுகாய், புத்துலகுக்குத் தோன்றுகின்றன.

மயிலும் குயிலும் பசுவும் உடனிருக்க, தங்கப்பீடத்தமர்ந்து, வானவில்லைத் தோழியாகக்கொண்டு அரோச்சிய ஹீரா தேவியாருக்கு, இன்று, பாழ்மண்டபமோ, அகல் விளக்கோ, திருநாளோ, நோன்பு கொண்டாடுவோரோ, இல்லை! அறிவு பிறந்ததும், ஹீரா, மாஜி கடவுளாகிவிட்டார்! ஆனால், மாரி, இங்கு ஆட்சி புரிகிறாள், இன்றும்!!