உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


விவரமறியாத நிலையில் விண்ணிலே வீற்றிருந்த ஜுவசின் தம்பிதான் பாசிடன்–கடலுக்கு அதிபதி! காற்றுக்குக் காவலன்! கடலிலே பெரியதோர் அரண்மனையில் அமர்ந்து பாசிடன் அரசோச்சி வந்தான். நீண்ட தாடி! எதிரியை வீழ்த்தும் கூர்மையான திரிசூலம்! பாசீடனுக்கு ரதம் உண்டு, வெளியே சென்று வர. அதிலே பூட்டப்பட்ட குதிரைகளுக்குப் பொன் மயமான பிடரி மயிர்! குளம்புகள், நவரத்தினங்கள் போல ஜொலிக்குமாம்.

பாசிடன்

விரிந்து பரந்து கிடக்கும் விண், மண், கடல் இம்மூன்றும், மனித சமுதாயத்துக்கு விளக்கம் கிடைக்காத காலத்தில், அச்சம், ஆச்சரியம் எனும் இரு உணர்ச்சிகளைத் தூண்டுவனவாகவே இருந்தன. இது இயற்கையும்கூட.

“இதென்ன அதிசயமோ நமக்கென்ன தெரிகிறது!” என்ற பேச்சு, இப்போதும்,—நவீன உலகில்—பல்வேறு சம்பவங்களின்போதும், காட்சிகளின் போதும், பலரால் கூறப்படுகிறதல்லவா! மனித சமுதாயம் பலநூறு நூற்றாண்டுகள், பயிற்சிபெற்று, பக்குவமடைந்து, பெரும் அளவுக்கு அறிவுத் தெளிவும் ஆராய்ச்சித் திறனும், பெற்றிருந்தும்கூட, இன்னமும் மனித அறிவுக்கு, ஆச்சரியகரமான, விளக்கம் கிடைக்காத பொருளும், காட்சியும், இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மனித சமுதாயம், நமக்கென்ன என்று இருந்துவிடுவதுமில்லை, நமக்குப்