60
மாஜி கடவுள்கள்
“எங்கே?......ஓ......ஆமாம், தெரிகிறது......வளைவாகத்தான் இருக்கிறது......பளபளவென்றும் இருக்கிறது”
“என்னவென்றே தெரியவில்லையே......என்னவாக இருக்கும்?......உனக்குத் தெரிகிறதா?”
“ஏதோ ஒன்று இருப்பதுதான் தெரிகிறதேயொழிய அது என்னவென்று தெரியவில்லையே......”
“எனக்குந்தான் தெரியவில்லை”
🞸🞸🞸🞸
மனித சமுதாயம், ஆராய்ச்சிப் பள்ளிக்கூடம் அமைக்காதபோது, இதுபோன்ற நிலைதான்—எதைப் பார்த்தபோதும்—எந்தப் பொருளைப்பற்றியும். பொருள் தெரிகிறது கண்ணுக்கு—பொருள் விளங்குவதில்லை, கருத்துக்கு! பொருள் விளங்காததால், பயன் கிடைப்பதில்லை. மனித சமுதாயம் நஷ்டமடைகிறது, தெளிவு இல்லாததால். நம் வீட்டு மாட்டுத்தொழுவத்திலேயே, ஒரு சிறு கட்டை இருக்கிறது—சிறு மரத்துண்டு—அது என்ன என்பது தெரியாத நிலையில், அதனால் பெறக்கூடிய பலன் கிடைக்காதல்லவா! பிறகு ஒரு நண்பன் பார்க்கிறான், அந்த மரத்துண்டை! அவனுக்குத் தெரிகிறது, அது சந்தனக்கட்டை என்று.—எனவே அதனால் பெறக்கூடிய பலனையும் தெரிந்துகொள்கிறான். அவன் சுயநலக்காரனாக இருந்தால், என்ன செய்வான்? “இந்தச் சிறு விறகு உனக்கு வேண்டுமா!” என்று கேட்பான்—ஆவலை மறைத்துக்கொண்டு, அலட்சியப் போக்காக “எனக்கு ஏன்! இது இங்கு நெடுநாளாக இருக்கிறது, இடமடைத்தானாக!” என்கிறான் விளக்கமிலான். சுயநலவாதி, “இதை நான் எடுத்துக்கொண்டு போகிறேன்—வீட்டிலே, ஒரு கதவுக்குத் தாளாக்க!” என்று கூறிவிட்டு, அதை எடுத்-