பாசிடன்
61
துக்கொண்டு போகிறான். என்றைக்கேனும் ஓர் நாள், பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுப்பான்—பூசிப் பூரிப்படையும்போதுகூட விளக்கமிலான், சுயநலவாதியின் சூதை அறிந்துகொள்ளமாட்டான்! அறிவீனம் தரும் நஷ்டம்! அதைச் சுயநலவாதி பயன்படுத்திக்கொள்கிறான் தன் சுகபோகத்துக்காக. ஆப்பிரிக்க நாட்டுப் பழங்குடிகள் விளக்கம் இல்லாத காரணத்தால் தங்கள் நாட்டிலே கிடைக்கும் வைரங்களை வெள்ளையர்களுக்குக் கொடுத்து, விளையாட்டுச் சாமானும் சோப்பு சீப்பும் வாங்கிக்கொண்டார்களல்லவா! அதுபோல, மனித சமுதாயத்தில், முதலில் விளக்கம் பெறாததால், பயன் கிடைக்காத நஷ்டமும், விளக்கம் பெற்ற ஒரு சில சுயநலவாதிகளால் பெருநஷ்டமும், ஏற்பட்டதுண்டு.
தன்னலமற்றவனாக அந்த நண்பன் இருந்திருப்பானானால், “அடடே! அருமையான சந்தனக்கட்டையை, முட்டாளே! மாட்டுத் தொழுவத்திலே வீசிவிட்டாயே” என்று கூறி, அதன் பயனை விளக்கியிருப்பான்.
அதுபோலவே, மூலையில் தெரியும் வளைவான, பளபளப்பான பொருள் என்னவென்று தெரியாமல், மனித சமுதாயத்தில் மிகப் பெரும்பாலோர் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், சூதுக்காரர், சுயநலக்காரர், முளைத்தனர்—இந்த விளக்கமறியாத நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு தங்கள் சுகவாழ்வை அமைத்துக்கொள்ள.
பய உணர்ச்சியைத் தூண்டமுடியும் அவர்களால்—பேராசை உணர்ச்சியைத் தூண்டமுடியும்—பித்தராக்க முடியும் அந்த எத்தர்களால்.
“என்னவென்று தெரிகிறதா?” என்று கேட்ட உடனே, “ஆஹா! அருமை! நீ பாக்யசாலி! அப்பா! அருள்பெற்றவன் நீ! உன் வீட்டிலே, பிரசன்னமாகிவிட்-