உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மாஜி கடவுள்கள்


டது, தேவப்பிரசாதம்” என்று, ஆவேசம் வந்தவன்போல பேசி, மேலும் ஆச்சரியப்படுபவனைப் பார்த்து, “அப்பா! இது, நீ எப்போது பார்த்தாய்?” என்று கேட்டு, “நான் நெடுநேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேனே” என்று அவன் கூற, “இப்போதாவது என்னிடம் காட்டினாயே! மகனே! மண்டியிடு! உடனே மண்டியிடு! உனக்கு இன்னதென்று விளங்காத அப்பொருள், என்ன தெரியுமா? பாம்பு! பயப்படாதே பாம்பு என்ற உடன்! பாம்பு உருவில் பகவான்!” என்று கூற, பகவானாக இருந்தால்கூட உரு, பாம்பு ஆகையால், என்ன ஆபத்தோ, என்று அவன் அஞ்ச, “கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்! பாம்பாக வந்துள்ள பகவான், உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்—மூடு கண்களை!” என்று கூறி, அவன் கண் மூடியது கண்டுகளித்து, திறந்ததும், “தேவனின் திருவருளே அருள்! வா, அப்பா, பயப்படாமல் வா, பகவான், பாம்பு உருவில் இருந்து இப்போது இரும்பு வளையம் போன்ற உருவம் எடுத்துள்ளார்”—என்று கூறி, வளையத்தைத் தொட்டுக் கும்பிட்டுக்காட்டி, அவனை ‘பாம்புக்கோயில்’ கட்டச்செய்து அதன், முதல் பூஜாரியுமாகிவிட முடியும்! மனித சமுதாயத்தின் விவரமறியாத பருவத்தின்போது, அற்புதங்களும் அவைகளின் பேரால் அமைந்த பூஜா இடங்களும், அவற்றை நடத்த ஏற்பட்ட பூஜாரிகளும், எண்ணற்ற அளவு!

கண் எதிரே, மூலையில் கிடந்த வளையத்துக்கே விவரம் இல்லாதபோது, மனித சமுதாயம் அஞ்சி, தந்திரக்காரனிடம் தாசனாகிடவேண்டி நேரிட்டதென்றால், விஞ்ஞானத்தின் துணைகொண்டும் இன்னமும் முற்றும் விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ள, விண், மண்,