உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசிடன்

63




கடல், என்பவைகளிடம், ஆதிகாலத்தில், எவ்வளவு அஞ்சியிருக்கவேண்டும், எவ்வளவு அடிமைத்தனம் வளர்ந்திருக்க வேண்டும்!

அதே இயற்கையின் உட்பொருள் இன்று பெருமளவுக்கு மனித சமுதாயத்துக்கு, ஆராய்ச்சியின் பயனாக விளங்கிவிட்டதால், எவ்வளவு பயன், ஏற்பட்டிருக்கிறது!

🞸🞸🞸

விவரமறியாத நிலையில் விண்ணிலே, வீற்றிருந்த ஜூவசின், தம்பிதான், பாசிடன்—கடலுக்கு அதிபதி! காற்றுக்குக் காவலன்! அலைகடலே அவன் அரண்மனை! அண்டத்தைக் கட்டிக் காக்கும் மூலதெய்வங்களில் பாசிடனும், முக்கியமானவன். கிரேக்க நாட்டவர், பாசிடனை, மிக மிகப் பயபக்தியுடன் தொழுது வந்தனர். அவர்களின் பயபக்திக்குக் காரணமும் இருந்தது.

கிரேக்கர்கள், கடல் மார்க்கமாகச் சென்று வாணிபம் நடாத்துபவர்—அவர்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை, கடலின்மீதே போக்கவேண்டிய நிலையில் இருந்தனர். கடலைக் காணும்போதெல்லாம், அவர்கள், உள்ளத்தில், ஆயிரம் எண்ணங்கள் கூத்தாடும்! இது எவ்வளவு பெரிதோ? எங்கு ஆரம்பமாகி எங்கு முடிகிறதோ? அலையின் காரணம் என்னவோ? இவ்வளவு நீரும், மழையினாலேயே நிரம்பிற்றோ, மழைநீர், பயிர்பச்சைக்கும், மக்கட்கும் பயன்படும்போது, அது கடலில் சேர்ந்ததும், கரிப்பாகிவிடும் காரணம் என்னவோ? இதை முதன்முதலில் வெட்டின மகாவீரன் யாரோ? இக்கடல், கலங்களைச் சுக்கு நூறாக்கும் அலைகளைக் கிளப்புகிறதே! காட்டாறு கரை புரண்டாலே, ஊர் அழிகிறதே! இந்தக் கடல், பெரும் வலிவுள்ளது—இது கிளம்பினால், கட்டுக்கடங்காது,