உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசிடன்

65


கான, சந்தர்ப்பமே அதிகம்—கடற்பயணம் அதிகம் என்ற காரணத்தால்.

கடற்பயணத்தின் போதெல்லாம், பாசிடனைப் பற்றிய நினைப்பு—அலை அதிகமாக எழும்பும்போதெல்லாம், அவன் நாமத்தைப் பஜிப்பது, கலம் ஆபத்தில் சிக்கும் போதெல்லாம், அவனுக்குப் பலி கொடுப்பது, பயணம் முடித்துக்கொண்டு, வீடுவந்ததும், ஆபத்தின்றி கொண்டு வந்து சேர்த்ததற்காக, ஊரில் கோயிலில், பாசிடனுக்கு, விசேஷமான பூஜை! பாசிடன் பாடு, கொண்டாட்டந்தான்!

பாருங்களேன், உருவை! கட்டுமஸ்தான் திரேகம்! அழிக்கும் திறத்தை விளக்க, காலின் கீழேயே, நசுங்கிக் கொண்டிருக்கும் எதிரி! கையிலே, திரிசூலம்! ஏறத்தாழ முயலகனைக் காலின்கீழ் போட்டு மிதித்தபடி, மழு ஏந்தி நிற்கும், “மகேசன்” போல் இல்லையா!

இப்போது சென்று கேட்டுப் பார்க்கச் சொல்லுங்கள், ‘தேவார திருவாசகங்களை’—கிரேக்க நாட்டில், “ஐயா! அலைகடல் அதிபன்! அதிபலதேவன் ஐயன் பாசிடனின் ஆலயம் எங்கே?” என்று! பதில், என்ன கிடைக்கும்! ஒரு கேலிப் புன்னகை! பிறகு ஓர் விளக்கம்! பாசிடன், மனித சமுதாயம், பகுத்தறிவுப் பள்ளியில் நுழையுமுன், இருந்தான்—இன்று இல்லை—பாசிடன் ஓர் மாஜி கடவுள்!—என்று கூறுவர்.

திருவாதிரைத் திருநாள் கொண்டாடும் நமது தோழர்கள், திகைப்படைவர், “ஏன் இந்த நாத்திகர்கள், பாசிடன் எனும் பகவானை இப்படிக் கைவிட்டு விட்டனர்! இந்த நாத்திகர்களை ஏன் நாதன் இன்னமும் விட்டுவைத்திருக்கிறார்” என்று எண்ணுவர். ஆனால் அவர்களோ, “யாரப்பா, இந்தப் பழைய பசலி! பள்ளிப் பிள்ளைகட்கு உள்ள தெளிவும் காணோமே இவர்கட்கு! பாசிடனைத்

5