66
மாஜி கடவுள்கள்
தேடுகிறார்களே, இந்த 20-ம் நூற்றாண்டில்!” என்று கேலி செய்வர்!
உலகத்தின் கேலியை நமது ‘மதவாதிகள்’ மதிக்கவா போகிறார்கள்! அவர்கள் இன்றும், ஆடிய பாதத்தைத் தேடிப் பார்த்தபடிதான் உள்ளனர்—ஆடலழகிகளின் துணையையும் நாடி, பாசிடன், இன்று கிரேக்க நாட்டிலும் சரி, அறிவு வளர்ந்த மற்ற நாடுகளிலும் சரி, ஒரு மாஜி கடவுள்! ஆனால், கிரேக்கரும், ரோம் நாட்டவரும், இன்று நம் நாட்டவர் இருப்பது போன்ற நிலையில் இருந்தபோது, பாசிடனுக்கு இருந்து வந்த ‘யோகம்’ அற்பசொற்பமானதல்ல! காரினித் என்ற நகரிலே, கண் கவரும் வனப்புள்ள கோயில், பாசிடனுக்கு! கடற்பயணம் செய்துவிட்டு வருவோர், கொட்டும் காணிக்கை, மலை மலையாகக் குவியும்—பூஜாரியின் நிலை, அதுபோலவே ஓங்கி வளரும். இன்று காரினித் நகரம் உண்டு, கோயில் கிடையாது; பாசிடனைப் பயபக்தியோடு தொழுத கிரேக்கர்களின் சந்ததியார் வாழ்கின்றனர், ஆனால் பாசிடனைத் தொழுதுகொண்டில்லை! முன்னோர்களின் மனதிலே மூண்டிருந்த அஞ்ஞான மூடுபனியில், விளைந்த பல கற்பனைத் தோற்றங்களிலே, பாசிடன் ஒன்று, என்று கண்டறிந்தனர்.
ஓங்காரப் பொருள்—ஒன்று, ஆகிவிட்டது!
கடவுளாக இருந்த பாசிடனுக்கு கற்பனை, எனும் நிலை பிறந்துவிட்டது, அங்கே!
தகப்பனை வீழ்த்திவிட்டு தன்னைத்தானே கடவுளாக்கிக்கொண்ட ஜுவஸ், தன் உடன்பிறந்தார்களின் பகை கூடாது என்று எண்ணி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ‘ஆதிபத்யம்’ அளித்தான்; அனைவரும், ஜூவசைத் தலைமைக் கடவுளாக ஏற்றுக்கொள்வது என்ற நிபந்தனையுடன்.