உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசிடன்

67


இம்முறைப்படியே, பாசிடனுக்கு, கடலுலகாளும் ‘பதவி’ கிடைத்தது.

கடலிலே, பெரியதோர் அரண்மனையில் அமர்ந்து பாசிடன் அரசோச்சி வந்தான். நீண்ட தாடி! எதிரியை வீழ்த்தும் கூர்மையான திரிசூலம்! பாசிடனுக்கு ரதம் உண்டு, வெளியே சென்று வர. அதிலே பூட்டப்பட்ட குதிரைகளுக்குப் பொன்மயமான பிடரி மயிர்! குளம்புகள், நவரத்னங்கள்போல் ஜொலிக்குமாம்.

பாசிடனுக்குக் கடலுலக ஆதிபத்யத்தை ஜூவஸ், அளித்தபோது, அங்கு அரசோச்சிக்கொண்டிருந்த தேவன் பெயர் டைடான் ஒஷியானஸ் என்பதாகும்—பெருங்கடல் என்பது பெயரின் பொருள். புதிய அதிபதியின் தோற்றத்தைக் கண்டதும் இவரிடம் போரிட்டுப் பயனில்லை என்பதைக் கண்டு கொண்ட பழைய தேவன், பதவியை இழப்பதே மேலெனக் கருதினானாம். பாசிடனின் கண்ணொளி கண்டதும் பழைய கடவுளுக்குக் கருத்துக் குழம்பிவிட்டதாம். ‘ராஜ்யத்தை’ப் பாசிடன் வசம் ஒப்புவித்துவிட்டதோடு, பாசிடனின் பராக்கிரமத்தைப் பற்றிப் பல்லாண்டு பாடி வந்தாராம் அந்தப் பழைய கடவுள்.

அட பழைய பரமசிவமே! என்று, பரிகாசப் பேச்சுப் பேசுவதுண்டல்லவா. கிரேக்கக் கடவுட் காதையிலே, பழைய கடவுள், புதிய கடவுள், என்பது, பரிகாசப் பேச்சல்ல—பகவானின் திருவிளையாடல்.

ஒரு அரசன், தன்னைவிட வலிவுள்ள வேறோர் அரசன் படை எடுத்து வந்தால், தோற்று ஓடுவது போலவே, கடவுள்களுக்கும் நேரிடுவதுண்டு! போரிட்டுத் தோற்றுத் துயருறுவதற்குப் பதில், பெண் கொடுத்து, சமரசமாவது போலவும், கடவுள்கள் செய்து கொள்வ-