68
மாஜி கடவுள்கள்
துண்டு. கடவுளின் குணம் இப்படியா? என்று ‘அறிவும் ஆத்திகமும், சம எடையாகக் கலந்து’ உட்கொண்டவர்கள், கேட்பர்—இக்காலத்தில். ஆனால் அந்த நாட்களிலே, ஆண்டவனைப் பற்றிய இத்தகு கதைகளை நம்புவதுதான், அறிவு, ஆத்திகம், இரண்டும்! மறுப்பவன் மாபாவி மட்டுமல்ல, மதியீனனாகவும் கருதப்படுவான்—இப்போதல்ல—பழைய நாட்களில்—பகுத்தறிவுக் கதிர் தோன்றா முன்னம்.
மூத்த மகன் பட்டத்தரசனாவதும், இரண்டாம் மகனுக்கும் மூன்றாம் மகனுக்கும், செல்வாக்கான வேறு பதவிகளோ, சிறு ராஜ்யங்களோ தரப்படுவதும், போதாது என்ற மனக்குறையும், அண்ணனுக்கு அரசனாகும் ‘பாக்கியம்’ கிடைத்ததே என்ற பொறாமையும் மூண்டெழும் ‘தம்பிமார்’, அண்ணனிடம், போரிடுவது, அரச குலத்துக் கதை! கடவுள்களின் கதையும் இதேதான்!!
அரச குடும்பத்திலேகூட இப்போது, பொறாமை காரணமாக, அமளி நடைபெற்றால், அறிஞர்கள் எள்ளி நகையாடுவர். பொறாமை, சூது, சதி, போர், கலகம் இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு அடிமையாகிக் கடவுள்களே பலப்பல செய்ததாகக் கதைகள் உண்டு—ஆனால் அவைகளைக் கேலியாகப் பேசவோ, கண்டிக்கவோ, சந்தேகிக்கவோ, கூடாது—ஆத்திகர் அறிந்தால் ஆத்திரப்படுவர்! கடவுள்களின் கதைகள் எப்படிப்பட்டவைகளாக இருப்பினும் சரி, கொலை, களவு, காமக்கூத்து, அடுத்துக் கெடுத்தல் எனும் எத்தகைய தீய செயல் புரிந்ததாகக் கதை இருப்பினும், அவைகளைக் கடவுளின் திருவிளையாடல் என்று பயபக்தியோடு எண்ணிக்கொள்ள வேண்டுமேயல்லாது, இப்படியுமா செய்வது என்று கேட்கத் துணிந்-