பாசிடன்
69
தால், தலை உருளும் கீழே. அவ்விதமான ஆதிக்கம் செலுத்தி வந்தனர், பூஜாரிகள்.
தேவனின் திருக்கலியாண குணம், மானிடருக்கு மதி புகட்டக்கூடியதாய், மனித குலத்தின் மாண்பினை வளர்க்கவல்லதாய், மனிதன் மனதிலே, தூய்மையான கருத்துக்களை, ஊட்டவல்லதாய், அவர், வெகுளி, காமம், சுயநலம், சூது முதலிய அருவருக்கத்தக்க, தீய நினைப்புகளைச் சுட்டெரிக்கக்கூடியதாகவல்லவா இருக்கவேண்டும். கடவுள்களுக்கிடையே போட்டியும் பொறாமையும், போரும் சதியும், கலகமும் கபடமும், இருந்ததாகச் சித்தரித்துக் காட்டும் கதைகள் உள்ளனவே—மனித குலம், இத்தகைய கதாநாயகர்களையா, கடவுள்களாகக் கருதித் தொழவேண்டும்—சரியா, முறையா, அறிவாகுமா இது—ஆத்திகந்தான் ஆகுமா!—என்றெல்லாம், கேட்பவர்களின் தொகை இன்று பெருகிவிட்டது—பெருகியபடியும் இருக்கிறது. ஆனால் ஆதிகாலத்தில், கிரேக்க நாட்டிலே அதுபோல பேசக்கூடாது—பேசுபவன் பெரும் பாவி!
அப்படி ஒருகாலம் இருந்ததா! அப்படி ஒரு நாடு இருந்ததா!! என்று சற்று ஆச்சரியத்துடன் கேட்பர், நம்நாட்டு அறிவாளிகளில் சிலர், நம் நாட்களில்! அவ்விதமான நிலைமை, கடலில் கட்டுமரமும் பாய்க்கப்பலும், தரையில் ரதமும் இருந்த காலத்தில், கிரேக்க நாட்டிலே இருந்தது ஆச்சரியமல்ல—இன்னும் நம் நாட்டிலே, வானத்தில் விமானமும், மண்ணில் மோட்டாரும், கடலில், அணுசக்தியால் செலுத்தப்படும் கப்பலும் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும் நமது நாட்களிலேயும், கடவுள்களுக்குள் ஏற்பட்ட போட்டி, போர் ஆகியவற்றினைச் சித்தரிக்கும் கதைகள், புண்ய கதைகளாக, பூஜா மாடங்களுக்கு ஏற்றவைகளாக, பாராயணத்துக்குரியவைக-