70
மாஜி கடவுள்கள்
ளாக, பக்தி ஊட்டவும் முக்தி தரவும் சக்திவாய்ந்த ‘சத்’ விஷயங்களாகத்தானே கருதப்பட்டுள்ளன—இது அல்லவா, ஆச்சரியம்! இன்றும், இவ்விதமான கதைகளைக் கண்டிப்பவர்கள்மீது காயவும் பாயவும், சர்க்கார் உட்படச் சனாதனப்படை தயாராக இருக்கிறதே, இதுவல்லவா ஆச்சரியம்!
வேடன், கையிலே வில்லும் முதுகிலே அம்புறாத் தூணியும் வைத்துக்கொண்டு போனால் ஆச்சரியப்படுவார் இல்லை—ஆனால் விலையுயர்ந்த மோட்டாரில் அமர்ந்துகொண்டு, நாகரிகமான உடை அணிந்து கொண்டு, வில்லும் அம்பும் ஒரு விசித்திர புருஷன் வைத்துக்கொண்டிருக்கக் கண்டால், எவ்வளவு ஆச்சரியம் ஏற்படும். அதுபோலத்தான், மனிதகுல முன்னேற்றத்திற்கு முன்பு, சிந்தனைத் திறம் தெளிவுபடுத்தப்படுவதற்கு முன்பு கிரேக்க நாட்டவர், மற்றப் பல நாட்டு மக்கள் போலவே, அறிவுக்கு ஒவ்வாத, ஆபாசம் நிறைந்த கதைகளை எல்லாம் நம்பி ஆலயம் அமைத்து, ‘ஆத்திகராக’ விளங்கினர்—அவர்களெல்லாம் அறிவுபெற்று, தெளிவுபெற்று, அஞ்ஞானத்தை விரட்டிவிட்டு, மெய்யறிவுத் துறையிலே மேலானதோர் இடம்பெற்று, உண்மையான கடவுட் கொள்கையையும், மார்க்கத்தையும் உணர்ந்தறிந்து, கற்பனைகளைக் களைந்தெறிந்தான பிறகும், நம் நாட்டிலே, நாகரிகத்தின் மேல்பூச்சைக் கொண்ட மட்டும் எடுத்துப் பூசிக்கொண்டு, கோலத்தை மாற்றிக்கொண்டு, உலகத்தோடு உறவாடிக்கொண்டு, உயர்ந்தோம் என்றும் வீம்பு பேசிக்கொண்டு, கடவுட் கொள்கையிலேயும், மார்க்கத் துறையிலும், மாடனையும் காடனையும், மன்னாரையும் மாரியையும், போரும் போட்டியும், போகபோக்கியத்துக்காகப் போட்டதாகக் கூறும் கதைகளையே சிறப்பு-