பாசிடன்
71
களாகக் கொண்ட பல்வேறு கடவுள்களையும், அன்று போல் நம்பும் போக்கிலே உள்ளனர்! இஃதன்றோ ஆச்சரியம்!!
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் போட்டியுணர்ச்சி ஏற்பட்டதாம்! கடவுள்களின் குணம், எப்படி இருக்கிறது பாருங்கள்!! யார் பெரியவன்? என்ற பலமான பிரச்னை! இதைத் தீர்த்து வைக்க, சிவனாரிடம் சென்றனராம்! அவர், மூவரிலும், தானே மூலவர் என்பதை நிரூபிக்க, இதுவே சமயம் என்று எண்ணி, ‘ஜோதிமயமாகி’, யார் என் அடியையும் முடியையும் முதலில் காண்கின்றனரோ, அவரே இருவரில் பெரியவர், என்று கூற, அடிகாண ஒரு கடவுளும், முடிகாண மற்றோர் கடவுளும் முயன்று, இரு கடவுள்களும் தோற்றதாக ஓர் ‘புண்ணிய கதை’ உண்டு—இன்றும் இதனை, நம்பினவன் நமசிவாயன் அருளையும், நம்பாதவன்; நாத்திகன் என்ற கெட்ட பெயரையும் பெறுகிறான்! நாட்டின் நிலைமை இதுபோல் இருக்கிறது!! திருவண்ணாமலைத் தலத்திலே, ஆண்டுதோறும் நடைபெறும் தீப தரிசனத் திருவிழா இந்த, ‘போட்டி’யைக் காட்டும் கருத்தோடுதான் பக்தர்கள், மதவாதிகள், கொண்டாடுகின்றனர். கோலியும் பம்பரமும் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள், வயது சென்றவர்களாகி, ஒருவன் வீரனாகி, ஊர்க்காவலனாகி வீதிவழி வரும்போது, அவனெதிரே, சிறு பிராயத்தில் தன்னோடு ஆடிக்கொண்டிருந்த சிறுவன் முதுமைக்கோலம் இருந்தும், முன்பு போலவே பம்பரம் ஆடிக்கொண்டிருக்கக் கண்டால், என்ன எண்ணுவான்!
கிரேக்க நாடு போன்ற பல நாடுகளும், நம் நாட்டைக் கண்டு, இதே விதமான எண்ணம்தானே கொள்ள முடியும்! உபசாரத்துக்காக உள்ளத்திலுதித்ததை மறைத்து