உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



72

மாஜி கடவுள்கள்


இரண்டோர் புகழுரைகளைத் தரும் என்ற போதிலும், மனதிலே, உண்மையாக, மதிப்பு ஏற்படமுடியுமா! நமது நாடுதான், அன்று போலவே இன்றும், அரசமரம் சுற்றும் அம்மையரையும், அடிமுடிகாணும் திருவிழா நடாத்தும் ஐயாமார்களையும் கொண்டதாக இருக்கிறதே! முன்பு நடந்து செல்வர், அல்லது கட்டை வண்டியில் செல்வர், தீபம் பார்க்க! இப்போது, புதிய மோட்டாரில் புறப்படுகின்றனர், கார்த்திகைக்கு! வித்தியாசம் கோலத்திலேயே தவிர, குணத்தில் இல்லையே! குவலயம் கேலி செய்யாமலா இருக்கும்!

கிரேக்க நாட்டிலே, அறிவுக் கதிர் முளைத்ததும், பாசிடன், பரிகாசப் பொருளாக்கப்பட்டான்! பகுத்தறிவு வென்றதும், மாஜி கடவுளானான்! அதற்கு முன்பு, கோயில்தான், கொண்டாட்டம்தான்!! பாசிடன் கோலாகலத்தைக் காணக் கூடிடும் பக்தர் கூட்டம் ஏராளம்தான்! கடலாதிபனைப் பற்றிய கதைகளைப் புண்ய கதைகளென நம்பி, கேட்டுப் பூரிப்படைந்ததோடு, முக்திக்கு ‘அச்சாரம்’ தந்ததாகத்தான் கருதினர்—அந்நாள் கிரேக்கர்கள்.

அண்ணன் அண்டமெல்லாம், ஆளும் பெருங்கடவுளாகவும், கடலாதிபதி என்ற நிலைமட்டுமே தனக்கும் என்ற ஏற்பாடு, பாசிடனுக்குப் பொறாமையை மூட்டிவிட்டது—ஜுவசைத் தொலைத்துவிட்டு, தானே மூலக் கடவுளாகி விடவேண்டும் என்று எண்ணினான்—அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தான். ஜூவசுக்கு எப்படியோ இரகசியம் தெரிந்துவிட்டது—உடனே எதிர்க்கத் துணிந்த தம்பிக்குச் சாபமிட்டு பூலோகத்துக்குத் தள்ளிவிட்டார்.

கடவுள் நிலையை இழந்து ‘மானிடனான்’ பாசிடன், டிராய் எனும் நகரை ஆண்டுவந்த, லயாமிடான் எனும்