உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசிடன்

73


அரசனிடம் வந்தான். அந்த அரசன், நகரைச் சுற்றிலும், பலமானதோர், கோட்டைச்சுவர், கட்டித் தந்தால், அரச மரியாதை செய்வதாகக் கூறினான். கடலை அடக்கி ஆண்டுவந்த பாசிடன் கருங்கற் சுவர் கட்டும் பணியை மேற்கொண்டான். மண்சுமந்த மகேசன் கதை இல்லையா நம்நாட்டில்—வைகைக்குக் கரை அமைக்க, கூலியாக வந்து, பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட பெம்மான் கதை, இன்றும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறதல்லவா! அதுபோன்ற கடவுள் கதை, கிரேக்கப் புலவன் கட்டினான்—ஆனால் இன்று அதை நம்புவார் இல்லை—திருவிழா இல்லை.

பாசிடன், இந்தப் பெரும்பணியை எவ்வாறு செய்து முடிப்பது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது, “நான் உதவி செய்கிறேன்” என்று கூறினான், அபாலோ! அபாலோவும் ஒரு கடவுள்தான். ஜூவசை எதிர்த்த குற்றத்துக்காகவே, அபாலோவும், பூலோகத்துக்குத் துரத்தப்பட்டான். எனவே இரு கடவுள்களும், மானிட உருவில், டிராய் நகரக் கோட்டைச் சுவர் கட்டும் காரியத்தில் ஈடுபட்டனர்!

அபாலோவிடம் ஓர் குழல் உண்டு—மாயக் குழல்! தாயைச் சேய் மறக்கவும், கணவனை மனைவி மறக்கவும், கொல்லும் கொடுமையைப் புலியும் பாம்பும் மறக்கவும் செய்யவல்ல, மதுரமான இசைதரும், மாயக் குழல், எமது கண்ணனிடமன்றோ இருந்தது!—என்று கேட்பர், பக்தர்கள்! ஆம்! அன்பர்காள்! அதேபோல, கிரேக்க நாட்டுக் கடவுள் கதை கட்டினோரும், அபாலோ தேவனிடம் அதி அற்புதமான மாயக் குழல் இருந்ததாகக் கூறினர்!

அந்த மாயக் குழலை அபாலோ, ஊதிட, மலைகள் உருண்டோடி வந்தனவாம், சுவர் கட்டும் பணிக்கு உதவி-