74
மாஜி கடவுள்கள்
யாக! குழல் ஊத ஊத, பெரும்பாறைகள், ஒழுங்காக, வரிசையாக, தாமாகவே அமைந்து, பலமான, சுவராகிவிட்டன எப்படிச் சாத்யமாகும் என்று ஏக்கம் கொண்டிருந்த பாசிடன், அபாலோவின் உதவியால் இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மன்னனிடம் சென்றான், பரிசு பெற.
மன்னன் அயோக்யன்—பரிசு தர மறுத்தான்—பணி முடித்த பாசிடனுக்கு. கோபம் மூண்டது, பாசிடனுக்கு. எனவே, ஒரு பயங்கரப் பிரம்மராட்சசனை உண்டாக்கி, ஊரைத் துவம்சம் செய்யும்படி ஏவிவிட்டுச் சென்றுவிட்டான்.
ஒரு பயங்கரமான பிரம்மராட்சசனை உண்டாக்கும் ‘சக்தி’ மானிட உருவிலும் பாசிடனுக்கு இருந்தபோது, சுவர் கட்டவா, முடியாமல் போய், அபாலோவின் உதவி தேவைப்பட்டது! பொருத்தமாக இல்லையே!! என்று கூறத் தோன்றும். பொருத்தம் இருக்கிறதா, பொருள் இருக்கிறதா, என்று பார்க்கக்கூடாது, புண்ணிய கதைகளில்—பாபம்—மகா பாபம்!!
டிராய் நகரம் அல்லோல கல்லோலப்பட்டது, பயங்கர ராட்சசனால்—எதிரே சிக்கினவர்களை எல்லாம் பிடித்துத் தின்னத் தொடங்கிற்று, அந்தப் பயங்கர உருவம்.
என்ன செய்வான் மன்னன்? அருள்பெற்ற ஆவேச மாடியை அணுகினான். அவன் ஓர் யோசனை சொன்னான். அழகான கன்னியை, அந்தப் பிரம்மராட்சசனுக்குப் பலி கொடுத்தால், அழிவு வேலை நின்றுபோகும் என்றானாம். அதன்படியே ஆண்டுக்கொரு அழகிய கன்னி பலி இடப்பட்டு வந்தாள்—கடைசியாக மன்னனின் மகள் ஹெஸியோன் பலியாக வேண்டிய நிலை வந்தது—அப்போது