பாசிடன்
75
தேவாம்சம் பெற்ற ஹெர்குலிஸ் எனும் வீரன் ராட்சசனைக் கொன்றான், என்று கதை முடிகிறது.
இந்தக் கதை மட்டும் கிரேக்க நாட்டிலே இல்லாமல், நம்நாட்டிலே புண்ய கதையாக இருந்திருந்தால், திருவிழா இன்றும் நடைபெறுமே!!
சாபம் தீர்ந்து, பழையபடி பாசிடன், கடவுளுலகு சென்று ஜுவசின் அனுமதிபெற்று, கடலாதிபனானான்.
பாசிடனின், பத்னியின் பெயர், ஆம்பிடிரைட் என்பதாகும். இவள் உடன்பிறந்த மங்கையர் ஐம்பதின்மர்! இவளை, மணம் புரிந்துகொள்ளப் பாசிடன் சென்றபோது, இவனது, பயங்கர உருவைக்கண்டு, பயந்து, ஓடினாளாம்!! பாசிடனுக்கோ, காதல்! பெண்ணுக்கோ, கிலி! பாசிடன் உடனே ஒரு கடல் குதிரையைத் தூது அனுப்பி, பெண்ணின் மனதை மாற்றச் செய்து, பின்னர் மணமுடித்துக் கொண்டான். பல குழந்தைகள் பெற்றெடுத்தாள் பத்னி. பாதி மனித உருவும் பாதி மீனுருவும் கொண்ட, டிரிடன் என்பானே, பாகிடனின் மக்களுக்குள் கீர்த்தி வாய்ந்தவனாக விளங்கினான்.
காதலின் சக்தியை அனுபவ பூர்வமாகக் கண்டதனால் போலும், ஒரு முறை, பாசிடன், பூலோகத்திலே காதல் பாதையிலே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த இடாஸ் எனும் வாலிபனுக்கு, தன் ரதத்தைத் தந்து உதவி புரிந்தான்—என்றோர் கதை உண்டு. இந்தக் காதலியின் பெயர், மார்ப்பேசா! இவள் தந்தை, காதலைத் தடுத்திடவே இடாஸ் துயருற்று, என்ன செய்வதென்று ஏக்கமடைந்தபோது, பாசிடன், தன் ரதத்தைக் காதலனுக்குத் தர, அதிலே, காதலியை ஏற்றிக்கொண்டு, வந்தான், காதலன். பெண்ணைப் பறிகொடுத்துவிட்ட, ஈவினஸ் என்-