76
மாஜி கடவுள்கள்
பான், துரத்திக்கொண்டு வந்தான்—(ருக்மணியைக் கண்ணன் கொண்டு வந்ததும் இம்முறையில்தான்!)
ஆனால், பாசிடனின், ரதத்தைப் பிடிக்க முடியுமா! காதலர் தப்பினர்—தகப்பனின் கோபத்தில் இருந்துதான்—கடவுளின் காமத்தில் இருந்தல்ல!
இந்த அழகு மங்கையைக் கண்டுவிட்டான் அபாலோ தேவன்! விடமாட்டேன் என்று கூறி, வழி மறித்துக் கொண்டான். நல்ல வேளையாக, அசரீரி கூறிற்றாம், ‘பெண் யாரை விரும்புகிறாளோ, அவனே அவளுக்கு மணாளனாகக் கடவன்’ என்று.
பெண்ணின் சங்கடத்தைக் கவனியுங்கள்.
ஒருபுறம், அபாலோ—கடவுள்—அழகன்!
மற்றோர் புறம், ஆபத்துக்களைத் துரும்பென எண்ணிய காதலன்!
யாரைத் தேர்ந்தெடுப்பது? தேவனையா? தேடிவந்த காதலனையா?
மதி மிக்கவள் அந்த மங்கை. அபாலோவோ கடவுள்களில் ஒருவர்—மூப்பு பிணி, சாக்காடுகளைக் கடந்தவர். எனவே அவர் எப்போதும் இன்றுபோலவே எழிலும் இளமையும் கொண்டவராக இருப்பார். நாமோ மானிடகுலம்—மூப்பு வரும், எழில் அழியும்! நாம் கிழவியாகி, அபாலோ குமரனாகவே அப்போதும் இருந்தால், நமது நிலை என்ன ஆகும்? காதல் கருகுமே!! வேறோர் வனிதையையன்றோ, குமரன் தேடிக்கொள்வார்! மனம் உடையுமே நமக்கு!!
நமது காதலனோ, நம்மைப்போலவே, மானிடன்—நாம் கிழவியாகும்போது அவனும் கிழவனாவான்—காத-