உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கிரீஸ், ரோம் நாடுகளில், கண்ணன், கந்தன் போன்ற ஆணழகர்களைச் சித்தரித்துத் தொழுது வந்தனர், கடவுட் கொள்கையிலே தெளிவு இல்லாத காலத்தில் இந்த நாட்டுக் கண்ணனுக்கும் முருகனுக்கும் எழிலில் எந்த வகையிலும் குறைவில்லாதவாதான், கிரேக்க நாட்டுச் சூரிய பகவான், ஆணழகன் அபாலோ தேவன்.

அபாலோ

மலக்கண்ணன்! கார்முகில் வண்ணன்! முல்லைச் சிரிப்பால் எவரையும் வெல்லவல்ல வசீகரமானவன்! பவழம், அவன் இதழ்! பாதமும் தாமரை! இதுபோன்ற எழில் ததும்பும் உருவம் எங்கு உண்டு. கண்டோர் தம் கலி தீர்ந்தது என்றுதானே கொண்டாடுவர்! கற்பனை என்றே வைத்துக் கொள்ளுவோம்—கட்டுக்கதையாகவே இருக்கட்டும்—பொறுத்தமற்ற புளுகு அந்தப் புராணம் என்றே வைத்துக் கொள்ளுவோம்—இருப்பினும் “கண்டதுண்டோ கண்ணன்போல்! புவியில்—” என்று உருகிக் கேட்பர் பக்தர்கள், கோபாலகிருஷ்ணனைப் பற்றி வெண்ணெய் திருடுவதும், வேய்குழல் ஊதி கோபியரை மயக்குவதும், மாயம் பல புரிவதும் ‘மகிமை’கள் என்று எண்ணுவது மதமா—என்று கேட்கும்போது, கதையைத் தள்ளு, எழில் உருவைப் பார்—இப்படிப்பட்ட