80
மாஜி கடவுள்கள்
கொண்டிருப்பவர் கிடையாது, ஆணழகன் அபாலோவின் அழகுபோல அவனியிலே கண்டதுண்டோ என்று பாடிடும் பாவையரும் கிடையாது. அழகு ததும்பத்தான் செய்கிறது ஓவியத்தில் சிற்பத்தில்! அணி அழகு மிளரத்தான் செய்கிறது கவிதையில்! எனினும் கற்பனைதான் அபாலோ—அதிலும் உண்மைக் கடவுட் கொள்கைக்கு ஒவ்வாத கற்பனை-அறிவுக்குப் பொருந்தாத கற்பனை, எனவே அறிவு வளர வேண்டுமானால், அபாலோ மாஜியாகத்தான் வேண்டும் என்று கிரேக்க நாட்டவர் தீர்மானித்தனர். இங்குதான், கடவுளை, கண்கவர் வனப்புள்ள உருவமாகக் கல்லில் செதுக்கவும், உலோகத்தில் சமைக்கவும் முடிந்தது, மற்ற நாட்டவர் எவருக்குமே இந்தக் கற்பனையும் திறமையும் இருந்ததில்லை என்று எண்ணுபவர்கள், கிரேக்க நாட்டு மாஜி கடவுள் அபாலோவின் ஓவியத்தைக் காணவேண்டும். கண்ணுள்ளோர் எவரும் கண்ணனிடமும் கந்தனிடமும் உள்ள கவர்ச்சிகரம் அபாலோவிடம் இல்லை என்று கூறிவிட முடியாது. அருளொழுகும் கண்கள்—சந்தேகம் இல்லை! ஆஜானுபாஹு—புராண பாஷைப்படி!! கிரேக்கர்கள், அபாலோ தேவனைத்தான் அழகிற் சிறந்தோன் என்று பூஜித்து வந்தனர்.
ஜுவஸ் தேவனுடைய திருக்குமாரன், இந்த அபாலோ—ஆனால் பட்டமகிஷிக்குப் பிறந்தவனல்ல, ஜுவசின் பரந்த காதல் சாம்ராஜ்யத்தில் உதித்த பாலகன்.
லாடோனா என்ற காரிகையை ஜூவஸ் காதலித்தான்—விளைவு இரட்டைக் குழவி—ஒன்று அபாலோ, மற்றொன்று பெண், இரண்டும் இணையிலா எழிலுருவங்கள்!
ஜூவசின் தேவியார் ஹீரா அம்மையாருக்குச் ‘சேதி’ தெரிந்தது—சீற்றம் மிகுந்தது—லாடோனாவை விரட்டி-