அபாலோ
81
னார்கள். பெரியதோர் பாம்பை ஏவினார்களாம், லாடோனாவைத் துரத்த—ஜுவசுக்குக் காதலை அர்ப்பணித்த காரிகை, கருவுற்றிருந்த நிலையில் ஓடினாள், ஓடினாள், எட்டுத் திக்கும், புகலிடம் தேடி! காப்பாற்ற எவரும் முன்வரவில்லை—அனைவருக்கும் அச்சம், ஹீரா தேவியார் சீறுவார்களல்லவா!!
கடலிலே ஒரு தீவு, ஓரிடத்திலேயும் தங்காமல், தெப்பக்கட்டை போல மிதந்து சென்றவண்ணம் இருந்ததாம். தீவின் பெயர், டீலாஸ்—இந்தத் தீவை, நிலைத்து நிற்கும்படிச் செய்து, அதிலே தங்கும்படி அருள்பாலித்தான், பாசிடன். பாவை, அங்குதான் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
லாடோனாவின் நிலை பிறகு நிம்மதி என்று எண்ணாதீர்கள். விடவில்லை விண்ணவன் தேவி—விரட்டினார்கள் மீண்டும். லாடோனா, காடு மலைகளெல்லாம் சுற்றித் திரியவேண்டி நேரிட்டது. ஒருநாள் அம்மைக்குத் தாகவிடாய்—அங்கு ஒரு குளத்தருகே சிலர் இருந்தனர்—அவலட்சணம் பிடித்த அற்பர்கள்—ஐயா! தாகம்! தண்ணீர்!-என்று தவித்த மாது கேட்க, அந்த அற்பர்கள், கேலி செய்தனர், பாவையின் பரிதாப நிலையைக் கண்டு பச்சாதாபம் காட்டவில்லை. ஜூவசுக்கு இது தெரிந்தது—உடனே அந்த அற்பர்களை, தவளைகளாகிவிடச் சாபமிட்டார். லாடோனா மேலும் பல அல்லல்களை அனுபவித்தாள்—கடைசியில் தேவரும் மாந்தரும் அவளை உத்தமி என்று கொண்டாட வேண்டிய நிலையும் பெற்றாள். லாடோனா தேவிக்கு, ஆர்காஸ், டீலாஸ், ஈஜிப்ட் ஆகிய இடங்களிலே ஆலயங்கள் அமைக்கப்பட்டன.
அபாலோ தேவன், வில்வித்தை, தேரோட்டம், யாழ் வாசித்தல், முதலிய வித்தைகளில் சமர்த்தனாகி,
6