உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மாஜி கடவுள்கள்


சூரியரதத்தை அன்றாடம் ஓட்டிச்செல்லும் உயரிய நிலையை அடைந்தான்.

புயல் வேகத்திலே செல்லும் புரவிகள் பூட்டப்பட்ட பொன்னாலான ரதம்—அபாலோவுக்கு—காலை முதல் மாலைவரை, தேரைச் செலுத்துவான், மாலையிலே பொன் ஓடம் தயாராக இருக்கும், அதிலேறிப் பொழுது போக்குவான். சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, எதன்மீதும், மோதிக்கொள்ளாதபடி, பாதை தெரிந்து, தேரைச் செலுத்துவது, அபாலோவின் திருப்பணி. சிறிதளவு தவறு நேரிட்டாலும், பெரும் அழிவு நேரிடும் அவ்வளவு பொறுப்பான வேலை, இதைத் திறம்படச் செய்துவந்தான் அபாலோ.

ஆற்றல்மிக்க அபாலோவுக்கோ இவ்வளவு பொறுப்பான, கடினமான வேலை இருந்தது—எனினும் காதல் வைபவத்துக்கு நேரம் கிடைக்கவில்லை என்று எண்ணிவிடாதீர்கள். உண்டு! பலப்பல!!

கிளைமின் என்ற பூலோக சுந்தரியைக் காதலித்தான் அபாலோ, ஒரு மகன் பிறந்து, மருத்துவ நிபுணனானான்–செத்தவரைப் பிழைப்பிக்கச் செய்துவிட்டான். உடனே, கோயில்கள் எழும்பின, மருத்துவதேவனுக்கு—பக்தர்கள் திரண்டனர். தீராதவியாதிகளைத் தீர்த்துவைக்கும் தேவனின் திருத்தலத்தை நாடி சாரை சாரையாகப் பக்தர் கூட்டம் செல்லலாயிற்று. அவன் திருக்கோயிலில் ஓரிரவு படுத்திருந்தால் போதும், நோய் பறந்தே போகும், என்றான் பூஜாரி—மக்கள் நம்பினர்.

புதிய தேவன்! புதிய கோயில்! பக்தர்கள் கூட்டம் அங்கே!—ஜூவசுக்குக் கோபம் கொதித்தது—பொறாமைத்தீ மூண்டுவிட்டது. இவன் யார், நமது பெரு-