அபாலோ
83
மையை அழித்துவிடக் கிளம்பிய புயல்! இவனைவிட்டு வைப்பது தவறு—என்று எண்ணி, ப்ளுடோ தேவனை அழைத்து, புதிய தேவன் தலையிலே இடிவிழச் செய் என்று கட்டளையிட்டான். ப்ளுடோ தேவன், இடி ஆயுதம் தயாரிப்பவரிடம் கேட்க, அவர்கள் இடியாயுதம் தந்தனர்—வீசினான், அபாலோவின் ஆற்றல்மிக்க மகன்மீது—மகன் மாண்டான்—செத்தவரைப் பிழைக்கச்செய்த மருத்துவதேவன் மாண்டான். தாங்கொணாக் கோபம், சோகம், அபாலோவுக்கு—சீற்றத்தை இடியாயுதம் தயாரித்தவர்மீது காட்ட முனைந்தான். ஜுவஸ், அபாலோவைக் கடவுள் ஸ்தானத்திலிருந்து நீக்கி, பூலோகத்திலே சென்று உழலும்படிச் சாபம் பிறப்பித்தார். சில காலம் அதுபோல் பூவுலகில் இருந்துவிட்டுப் பிறகு, அபாலோ கடவுளருலகு வந்து பழைய பணி புரிந்துவந்தார்.
அதுவரையில் யார், சூரிய ரதத்தைச் செலுத்தியவர்? மகனை, ஏன் அபாலோ, தேவருலகுக்கு அறிமுகப்படுத்தவில்லை—காதலித்தவளைக் கடிமணம் புரிந்தாரா இல்லையா! பூலோகவாசிகளின் நோய் நொடியைத் தீர்த்து வைப்பது நல்ல காரியமல்லவா—அந்த திருத்தொண்டு புரிந்தவனை முழுமுதற் கடவுள் ஏன் ‘சம்ஹரித்தார்’ ‘துஷ்டநிக்ரஹம் சிஷ்டபரிபாலனம்’ என்பதுதானே கடவுளின் நீதி என்பார்கள், இந்தக் ‘கொலை’ ஏன்! என்பனபோன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. கேட்கத்தான் தோன்றும். ஆனால் கேட்பது நாத்திகம். அந்த நாள் பூஜாரியின் கடுமையான சட்டம் அது. நெடுநாள்வரை அவனுடைய ‘கப்சிப்’ தர்பார் நடைபெற்று வந்தது. ஆனால் கடைசியில் அவனுடைய குட்டு வெளிப்பட்டு மக்கள் வென்றனர்—இங்கல்ல—அங்கு! பூஜாரியின் புரட்டுரைகளை மெய்யென நம்பியபோது,