உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

மாஜி கடவுள்கள்


கிரேக்க மக்கள் இதுபோன்ற பல கதைகளைப் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தனர்.

காதல் விவகாரத்தில் ஜூவசுக்குத்தான் வெற்றி மேல் வெற்றி. அபாலோவுக்கு அந்தத் துறையிலே, வேதனைதான் அடிக்கடி.

காதல் கணைகளை ஏவிடும்! கடவுள், க்யூபிட்—கிரேக்க நாட்டு மன்மதன்.

இவன் வில்லம்பு வைத்துக் கொண்டிருக்கக் கண்ட அபாலோ, வேடிக்கைக்காக கேலிமொழி புகன்றான். வெகுண்டெழுந்த க்யூபிட், என் கணையின் சக்தியைப் பார் என்றுகூறி, அபாலோமீது ஓர் கணையை ஏவினான்–காதல் சுரந்தது—ஆற்றுதேவன் பீனியஸ் என்பானின் மகள் டாப்பீன் என்பவள்மீது. காதல் தணலாகிவிட்டது அபாலோவுக்கு. க்யூபிட், தன் வல்லமையை அபாலோ உணரவேண்டும் என்பதற்காக, மற்றோர் காரியம் செய்தான். டாப்பீன் எனும் தையலின்மீது ஒரு கணை தொடுத்தான்—காதலைத் தூண்டும் கணையல்ல—காதலென்றாலே கடுவிஷம் என்று கருதி வெறுப்பை அடையச் செய்யும் கணை.

வேடிக்கையாகத்தானே இருக்கும்—அபாலோவுக்குத் தவிர—இந்தக் காட்சி.

அபாலோவுக்கோ அவள்மீது அடக்கொணாக் காதல்! அவளுக்கோ, காதல் என்றாலே வெறுப்பு, அபாலோ அணுகுகிறான், அவள் அஞ்சி ஓடுகிறாள், க்யூபிட் சிரிக்கிறான். அபாலோ துள்ளுமத வேட்கைக் கணையாலே தொல்லைப்படுபவன்—எனவே அவளை அடைந்தே தீருவது என்று துரத்துகிறான்—அவளுக்கோ காதல் என்-