அபாலோ
85
றாலே நஞ்சு, எனவே அவள் ஓடுகிறாள்! துரத்துகிறான் தேவன், ஓடுகிறாள் அரசகுமாரி நெடுநேரம், நெடுந்தூரம். கடைசியில் களைத்துவிட்டாள்–எனினும் இணங்க முடியுமா—வெறுப்புக் கணையல்லவா வேலை செய்கிறது—எனவே அபாலோவிடம் சிக்காமலிருக்க, தன்னை உருமாற்றும்படி தந்தையை வேண்டுகிறாள்—அவன் அரசன்தான். எனினும் அவனுக்கு அந்த அற்புத ஆற்றல் இருந்ததுபோலும்—மகளை ஒரு மரமாக்கிவிடுகிறான். கைக்கு எட்டியும் பயனில்லை—அபாலோ அவதிப்படுகிறான். க்யூபிட் தன் வெற்றியைக் கொண்டாடுகிறான்.
மற்றோர் சமயத்தில், அபாலோவுக்கு, காதல் விருந்து கிடைத்தது—கிளைமின் என்ற தேவதையிடம்! ப்யேடன் என்ற மகன் பிறந்தான். அபாலோ, தன் காதலியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தவில்லை—விருந்து முடிந்தது, விளைவு பிறந்தது. தன் வேலைக்குச் சென்றுவிட்டான். தேவதை, தன் குமாரனை வளர்த்து வந்தாள். “உன் தந்தை சாமான்யரல்ல! விண்ணும் மண்ணும் வியந்திடும் அழகன், ஆற்றல் மிக்கோன்—அபாலோவின் மகனடா நீ!”— என்று அன்னை அடிக்கடி கூறி வந்தாள். மகனுக்கு மமதை இது கேட்டு.
ஒரு நாள் வேறோர் தேவகுமாரன், ப்யேடனைக் கேலி செய்தான் அபாலோதான் உன் தந்தை என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டுவிட்டான். ப்யேடன் கோபம் கொண்டான், வருத்தமாகவும் இருந்தது. தாயிடம் முறையிட, அவள், அபாலோவிடம் சென்று கேள், ஆதாரம் தருவார், என்றாள். எனவே ப்யேடன், கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், அபாலோ வாழுமிடம் சென்றான். கண்களைப்பறித்து விடுவதுபோல மின்னிக்கொண்டிருந்தது அபாலோ தேவனின் தங்கமாளிகை. ரதம், தயாராகக்