பக்கம்:மாணவர்களுக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மாணவர்களுக்கு

மொழியாலும் இலக்கிய வளத்தாலும் மட்டுமின்றிப் பண்பாட்டுச் சிறப்பாலும் நாம் பெருமையுடையவர்கள். நம் தமிழ்மொழி, தனக்கெனத் தனித்த உயரிய பண்பாட்டினை உடையது. தமிழர் கண்ட இசை ஏழு சுவை ஆறு; நிலம் ஐந்து; காற்று நான்கு. இவற்றை உலக அரங்கே ஒப்புக் கொள்கிறது. அவ்வாறே மொழியை மூன்றாக, இலக்கணத்தை இரண்டாகக் கண்டு மொழியை வளர்த்தனர். ஒழுக்கத்தையும் இறைவனையும் ஒன்றாகவே கண்டு பண்பாட்டை வளர்த்தனர். என்று தமிழின் அரும்பெரும் சிறப்புகனை எண்களை நிரல்பட வைத்து விளக்கியுள்ள திறம் போற்றற்குரியது. மேலை நாடுகளெல்லாம் தத்தம் தாய்மொழியிலேயே பயிற்றுவித்து விஞ்ஞானத்தில் முன்னேறி வரும் இந்நாளில், நாம் மட்டும் அந்நிய மொழியை வளர்த்து அவலத்துக்கு ஆளாகிறோமே எனக் கவல்கிறார் (ப. 46).

தமிழ் வாழ வழிகூறும் இப் பேரறிஞர். தமிழைத் திருத்தமுற எழுத வேண்டும் என வலியுறுத்துகிறார்.

"கொம்புசுழி கோணாமல் கொண்டகோல் சாயாமல்
அம்புகோல் கால்கள் அசையாமல்-தம்பிநீ
எழுதினால் வாழ்வுண்டு வளமுண்டு புகழுண்டு
இன்றேல் உனக்கு எதுவுமில்லை'

(ப, 24)

என்ற பாடலைத் 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என மதித்து எடுத்துக் காட்டுகிறார்.

மாணாக்கியருடைய கல்விப் பருவத்தை 'Y 'என்ற ஆங்கில எழுத்தோடு ஒப்பிட்டு விளக்குகிறார் ஆசிரியர். இப்பகுதி படிக்கவும், சிந்திக்கவும். ஏற்கவும் ஏற்றதாகும் (ப. 60), “மாணவர்கள் எதிர்காலத் தலைவர்கள் என்பது தவறு; இக்காலத் தலைவர்கள் என்பதே பொருந்தும்... நீங்கள் நினைத்தால்தான் சாலைகளில் பேருந்தும் ஓடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/10&oldid=1267720" இலிருந்து மீள்விக்கப்பட்டது